லென்சின் விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லென்சின் விதி Lenz's law மின்காந்தத் தூண்டலின் மூலம் தூண்டப்படும் மின்னியக்க விசையின் திசையை வரையறுக்கிறது. இது ஜெர்மானிய பௌதிகவியலாளரான ஹைன்ட்றிக் லென்ஸ் (Heinrich Lenz) என்பவரினால் 1834இல் தரப்பட்டது.
- ஒரு மின்சுற்றில் மின்னியக்க விசை தூண்டப்படும் போது, தூண்டப்பட்ட மின்னோட்டம் அதை உண்டாக்கக் காரணமாயிருந்த காந்தப்பாய்வின் மாற்றத்தை எதிர்க்கும் முறையில் அமையும்.
[தொகு] வரையறை
லென்சின் விதி ஃபரடேயின் விதியின் மூலம் நிறுவப்படும். இரண்டு விதிகளையும் இணைத்தால்,
இங்கு,
- V தூண்டப்பட்ட மின்னியக்க விசை,
- N சுற்றுகளின் எண்ணிக்கை,
- Φ சுற்றுடன் தொடர்புடைய மொத்தப் பாயம்
- dΦ/dt நேரத்துடனான காந்தப்பாய மாற்றம்.
லென்சின் விதி இங்கு (-) குறியினாற் தரப்படுகிறது.
[தொகு] ஆற்றல் அழிவின்மை விதியிலிருந்து விளக்கம்
லென்ஸ் விதி ஆற்றல் அழிவின்மை விதிக்கு (law of conservation of energy) உட்பட்டு உள்ளது. தூண்டல் மின்னியக்க விசை எந்திர ஆற்றலின் விளைவால் தோன்றுகிறது. ஒரு காந்தத்தைக் கம்பிச் சுருளுக்குள் எடுத்துச் செல்லும்போது லென்சின் விதிப்படி, காந்தம் எடுத்துச் செல்லும் விசையின் திசைக்கு எதிர்த் திசையில் ஒரு விசை தோன்றி, காந்தத்தின் மீது வேலை செய்கிறது. இந்த வேலையே மின்னாற்றலாக மாறி மின்னோட்டமாகச் செல்லுகிறது. இந்த மின்னாற்றல் கம்பிச் சுருளில் வெப்பமாக மாறி, மறைகிறது. மாறாக, காந்தத்தை எடுத்துச் செல்லும் விசையின் திசையில் விசை தோன்றியிருப்பதாகக் கொண்டால், இவ்விசை காந்தத்தின் இயக்கத்துக்குத் துணையாக இருந்து, காந்தம் வேகமாக கம்பிச்சுருளை நோக்கி நகர துணை புரியும். அதனால் மின்னோட்டம் முடிவிலியாக வளரும். மேலும் இயக்க ஆற்றலும் மின்னாற்றலும் புறவேலையின்றி தோன்றுவதாக அமையும்; ஆனால் இது நடைபெறமுடியாத ஒரு நிகழ்வு என்பதால் தூண்டல் மின்னோட்டம் அதைத் தோற்றுவிக்கும் செயலை எதிர்க்கும் திசையில் இருக்கும் என்பது உண்மையாகிறது.
[தொகு] நுட்பியற் சொற்கள்
- மின்காந்தத் தூண்டல் - Electromagnetic Induction
- மின்னியக்க விசை - Electromotive Force
- மின்சுற்று - Electric Circuit
- மின்னோட்டம் - Electric Current
- காந்தப் பாயம் - Magnetic Flux
- ஆற்றல் அழிவின்மை விதி - Law of Conservation of Energy