வகையீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒர் செயலியின் (y=f(x)) சாரா மாறி மாறும்பொழுது அதனுடன் தொடர்புடைய சார் மாறி மாறும். சாரா மாறி சிறிதாக மாறும் பொழுது dx, டி எக்ஸ் என்று ஆக குறிக்கப்படும். ஒரு செயலியின் சாரா மாரி சிறிதாக மாறும்பொழுது dx; அந்த x சாரா மாறியை சார்ந்த y ஒத்த விதமாக சிறிதாக மாறும் dy பொழுது, இரண்டுக்கும் மிடையே இருக்கும் விகித தொடர்பின் கணிப்பே வகையீடு ஆகும். அதாவது x சிறிது மாறினால் dx, அதற்கேற்றாற்போல் y சிறிது மாறினால் dy, இரண்டு மாற்றங்களுக்கும் இடையே உள்ள விகிதம் dy/dx என்ன என்பதே வகையீடு பெறுமானம் ஆகும்.