Wikipedia:வலைவாசல் அமைத்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புதிதாக உருவக்கியிருக்கும் நுழைவாயில்:தமிழ்நாடு - ஐ பார்க்கவும். இதை பின்பற்றி வேறு ஒரு தலைப்பில் நுழைவாயில் எளிதில் அமைக்கலாம்.
- (எடுத்துக்காட்டாக) இதை பின்பற்றி இந்தியா என்னும் நுழைவாயில் அமைப்பதென்றால்,
-
- இப்பக்கத்தின் மூலம் (source) அனைத்தையும் ஒரு புதுபக்கத்தில் (நுழைவாயில்:இந்தியா என்னும் தலைப்பில்) நகல் எடுக்கவும்
-
- பின்னர் அந்த நகலில் எங்கெல்லாம் தமிழ்நாடு என்று உள்ளதோ அவ்வனைத்து இடங்களிலும் கவனமாக பார்த்து, ஒன்று விடாமல் இந்தியா என மாற்றவும். ஒவ்வொரு பகுதிகளும் தனித்தனி வார்ப்புருக்கள் ஆதலால் ஒரு இடம் விடுபட்டாலும் பெருங்குழப்பம் ஏற்படும். ஆகையால் கவனமாக அனைத்தையும் மாற்றவும். (தமிழ் நாடுக்கு பதிலாக இந்தியா; வேறு எதையும் மாற்றவேண்டாம்)
-
- தலைப்புகளில் மாற்றம் வேண்டுமெனில் செய்யவும். உதாரணமாக அறிமுகம் என்னும் இடத்தில் முகவுரை என மாற்ற வேண்டுமென்றால் அதில் மாற்றவும்.
-
- இவ்வனைத்தையும் செய்து பக்கத்தை சேமிக்கவும்
-
- சேமித்தவுடன் இரண்டு வரிசையாக பல சிவப்பு இணைப்புகளை பார்க்கலாம். அவற்றில் வார்ப்புரு:இந்தியா/box-footer, வார்ப்புரு:இந்தியா/box-header (நாம் உருவாக்கும் தலைப்பு இந்திய ஆதலால் இந்தியா/box-footer) ஆகியவற்றை மட்டும் வார்ப்புரு:தமிழ்நாடு/box-footer, வார்ப்புரு:தமிழ்நாடு/box-header ஆகிய பக்கங்களிலிருந்து அப்படியே நகல் செய்யவும். வண்ணங்களை வேண்டுமானால் அந்தந்த இடங்களில் விருப்பத்துக்கேற்ப (#eea , #aaa, #fff ...) என பலவாறாக மாற்றிக்கொள்ளலாம்.
-
- இவை முடிந்தவுடன் நுழைவாயில்:இந்தியா என்னும் பக்கத்தை சேமிக்கவும்.
-
- இவ்வாறு சேமித்தவுடன் தற்போது நுழைவாயில்:தமிழ்நாடு இருப்பது போன்று நுழைவாயில்:இந்தியா என்னும் பக்கத்தை பார்க்கலாம். பின்னர் ஒவ்வொரு சிவப்பு இணைப்புகளையும் சொடுக்கி அந்தந்த பகுதிகளில் எழுதவேண்டியவற்றை கட்டுரைகளிலும் வார்ப்புருக்களிலும் அமைப்பது போன்று அமைக்கவும்.