வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்த இலக்கண குறிப்பில் வரும் உள்ளடக்கம் தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டவை. இங்கு குறிப்பிடப்படும் உதாரணங்களும் அந்நூலில் இருந்து பெறப்பட்டவையே. புலவர் அ.சா. குருசாமி அவர்களால் தமிழில் பிழையின்றி எழுத உதவும் நல்நோக்குடன் தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்) எழுதப்பட்டது.
தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று பிரிப்பர். க, ச, ட, த, ப, ற ஆகியவையே வல்லெழுத்துக்கள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. க, ச, த, ப ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
ககரம், சகரம், தகரம், பகரம் முதலில் வரும் சொற்களில் "சில இடங்களில் அவ்வாறு வந்த வல்லின மெய் இடையில் மிகும்." இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் இரு சொற்களுக்கும் இடையே குறையாகத் தோன்றும். "இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்."
பொருளடக்கம் |
[தொகு] வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
[தொகு] அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
- அ+காலம் = அக்காலம்
- இ+சமயம் = இச்சமயம்
- உ+பக்கம் = உப்பக்கம்
[தொகு] எ என்னும் வினா எழுத்தின் பின்
- எ+பொருள் = எப்பொருள்
[தொகு] அந்த, இந்த, எந்த என்னும் சுட்டு வினாத் திருபுகளின் பின்
- அந்த+காலம் = அந்தக் காலம்
- இந்த+சிறுவன் = இந்தச் சிறுவன்
- எந்த+பையன் = எந்தப் பையன்
(விரியும்)