வாகதீச்வரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாகதீச்வரி 34 வது மேளகர்த்தா இராகமாகும். விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்). 6 வது சக்கரத்தில் 4 வது மேளம்.
- ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
- அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
- வாகதீஸ்வரி மேளத்தின் மத்திமத்தை க் கிரக பேதம் செய்தால் நாகநந்தினி (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் பவப்பிரியா (44) மேளமும் தோன்றுகிறன.
- சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
- அசம்பூர்ண மேள பத்ததியில் "போகசாயா நாட்டை" என்று பெயர்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : பரமாதமுடு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : நாதானு சந்தான : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : வாகதீஸ்வரி : ஜம்பை : சுத்தானந்த பாரதியார்.