வாசஸ்பதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாசஸ்பதி 64வது மேளகர்த்தா இராகம். எப்பொழுதும் பாடக்கூடியது.
ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி2 ஸ |
[தொகு] இதர அம்சங்கள்
- "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 4 வது மேளம். 28வது மேளமாகிய ஹரிகாம்போஜியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரத்தியாகத கமகம் இதற்கு அழகைக் கொடுக்கின்றது.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு பூஷாவதி என்று பெயர்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே சாருகேசி (26), கௌரிமனோகரி (23), நாடகப்பிரியா (10) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : கண்ட சூடுமீ - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : அன்பருளம் - ஆதி - இலட்சுமணப்பிள்ளை.
- கிருதி : வேறு துணை - ரூபகம் - இராமசாமி சிவன்
- கிருதி : இகபரசுக - ரூபகம் - கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பராத்பர - ஆதி - பாபநாசம் சிவன்.