விடுகதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விபரிக்காமல்) விபரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையை பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாக "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும். [1]
[தொகு] விடுகதை உதாரணங்கள்
- சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)
- ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? (தேன்கூடு)
- பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? (தவளை)
[தொகு] குறிப்பு
- ↑ ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.
[தொகு] வெளி இணைப்புகள்
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை |