விண்டோஸ் எக்ஸ்பி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
|
படிமம்:Windows xp desktop.PNG ஒரு சாதாரண விண்டோஸ் எக்ஸ்பியின் மேசை |
|
நிருவனம்/ ஆக்குகையாளர்: |
மைக்ரோசோஃப்ட் |
செயற்படுமுறைமை குடும்பம்: | விண்டோஸ் என்டி |
ஆதாரமூல மாதிரியம்: | மூடிய ஆதாரமூலம் |
மிகப்பிந்திய நிலையான வெளியீடு: | சேவை பொதி 2 / ஆகஸ்ட் 6, 2004 |
உருமைய வகை: | கலப்பு உருமையம் |
கொடாநிலை பயனர் இடைமுகம்: | வரைவியல் பயனர் இடைமுகம் |
உரிமம்: | மைக்ரோசோஃப்ட் உரிமம் |
பணிநிலை: | நடப்பு |
இணையதளம்: | விண்டோஸ் எக்ஸ்பி |
விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), என்பது கணினிகளை இயக்கும் அடிப்படை இயக்கு தளம் ஆகும். இது மைக்ரோசோஃப்ட் விண்டோஸ் வழி வந்த ஒரு இயக்கு தளம். இது மேசைக் கணினி, மடிக் கணினிகளில் பயன்படுகின்றது. வீட்டுக்கான பயன்களுக்கும் தொழிலக, வணிக ப்யன்பாடுகளுக்கும் பெரிதும் பயன்பட்டு வரும் ஒரு இயக்க தளம். இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP எனும் ஆங்கில எழுத்துக்களானது EXperience இல் இருந்து வந்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000 வழிவந்த விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும் ஒருங்கிணைத்து சேர்க்கப்பட்ட முதலில் ஆக்கப்பட்ட விண்டோஸ் NT கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து உருவாக்கப்பட்ட இயக்குதளமாகும். இப்பதிப்பானது அக்டோபர் 25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி 400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை இயக்குகின்றது.
இதன் முக்கியமான பதிப்புக்களாவன விண்டோஸ் எக்ஸ்பி வீட்டுப் பதிப்பு (ஹோம் எடிசன்) (இது வீட்டுக் கணினிகளுக்கானது. இதில் கணினியை மைக்ரோசாப்ட் விண்டோஸ் டொமைன்களில் இணைக்கும் வசதிகிடையாதெனினும் நாவல் (Novell) நெட்வேர் இணைந்துகொள்ளலாம்.), தொழில்வல்லுநர் பதிப்பு (புரொபெஷனல் எடிசன்) என்பது வீட்டுப் பதிப்பின் வசதிகளுக்கு மேலதிகமா டொமைன்களில் இணைதல், இரு பணிக்கருக்கள் (Dual புரோசசர்களையும்) கொண்ட கணினிகளையும் இயக்கவல்ல இப்பதிப்பானது விண்டோஸ் பயனர்களுக்கும் தொழில், வணிகப் பயனர்களுக்கென உருவானதாகும். விண்டொஸ் எக்ஸ்பி பல்லூடகப் பதிப்பு (மீடியா செண்டர் எடிசன்) என்பது பல்லூடக வசதிகள் நிரம்பியதாகும் இதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யலாம். இத்துடன் 64 பிட் புரோசசர்களுக்கென்றே (AMD Athlon™ 64 FX, AMD Sempron™, AMD Opteron™ மற்றும் இண்டெலினால் உருவாக்கபட்ட 64 பிட் புரோசசர்கள்) உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் x64 பிட் பதிப்புக்களும் அடங்கும்.
பொருளடக்கம் |
[தொகு] பதிப்புக்கள்
விண்டோஸ் எக்ஸ்பி இரண்டு முக்கியமான பதிப்புகளாக வெளிவந்தது. விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் வீட்டுப் பாவனைக்காக உருவாக்கப் பட்டதாகும். விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல் வர்தக மற்றும் மிகுதியாகக் கணினியைப் பாவிக்கும் வீட்டுப் பாவனையாளர்களுக்கும் என்று உருவாக்கப் பட்டதாகும். இதன் ஏனைய பதிப்புக்கள் விசேட வன்பொருடகளுக்கென்று ஐரோப்பாவிற்கு என்றும் மற்றும் விலைமலிவாக்கப்பட்ட விண்டோஸ் பதிப்புக்களும் அடங்கும்.
விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசனில் இல்லாத சில வசதிகளைக் கொண்டுள்ளது.
- விண்டோஸ் சேவர் டொமைனில் இணைதல் - கணினிகளைக் குழுக்களாக ஓர் டொமைனூடாகச் சேர்த்து சேவர் கணினியூடாக இயக்குதல் (பல வர்தக நிறுவனங்கள் விண்டோஸ் சேவர் மற்றும் டொமைன்களைக் கொண்டுள்ளது)
- வினைத்திறனாகக் கோப்புகளைக் கையாளும் வசதி. எனினும் பயனர்கள் பாதுகாப்பான பணிச்சூழலில் (safemode) இல் கணினியை ஆரம்பித்து கோப்புக்களின் யார் யார் அணுகலாம் என்பதை மாற்றியமைக்கலாம்.
- ரிமோட் டெஸ்க்ஸ்டாப் - அலுவலக வலையமைப்பூடாக பிறிதோர் கணினியைக் கையாளும் வசதி.
- தொடர்பற்ற நிலையிலுள்ள கோப்புக்களும் (offline files) கோப்புறைகளும் (folders).
- இரகசியமான (Encrypted) கோப்பு முறை - கணினியில் சேமிக்கப்பட்ட கோப்புக்களை ஒருவர் அணுகமுடியும் எனினும் அவரை அக்கோபினை திறக்கமுடியாதபடி செய்யும் Encryption.
- தானாகவே கணினியில் விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவுதல், அலைந்து திரியும் பயனர்கள் (Roming Users), தானகவே மென்பொருட்களை நிறுவுதலும் மற்றும் பராமரித்தல்கள் போன்றவற்றை குழுக் கொள்கைகளூடாகச் (Group Policy) செய்தல்.
- இரண்டு புரோசர்களைக் கையாளும் வசதி. இப்பொதுள்ள புரோசசர்களில் உள்ள கைபதிரடிங்க் (Hyper threading) போன்றவற்றினூடாக ஒன்றிற்கு மேற்பட்ட புரோசர்களாகக் கருதப்பட்டாலும் விண்டோஸ் எக்ஸ்பி இன் பயனர் அனுமத்திக்கு (EULA - End User License Agreement) இவற்றை ஒரு புரோசராகவே கணிக்கப்படும்.
[தொகு] விசேட வன்பொருட்களுக்கான விண்டோஸ் எக்ஸ்பி
[தொகு] சேவைப் பொதி
இயங்குதளத்தில் புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் மற்றும் இயங்குதளத்தில் பிழைகளைச் சீர்செய்யவும் மேம்படுத்தல்களைச் செய்யவும் சேவைப் பொதிகளை மைக்ரோசாப்ட் காலத்திற்குக் காலம் வெளிவிடுகின்றது.
[தொகு] சேவைப் பொதி 1
இசேவைப் பொதியானது செப்டெம்பர் 9, 2002 வெளியிடப் பட்டது. இதில் USB 2.0 இயங்குதளதினூடான நேரடி ஆதரவு (விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியில்லாமலேயே USB 2.0 ஐ ஆதரிக்கும் எனினும் இதற்கென விசேடமாகாத் தாயாரிக்கபட்ட டிவைஸ் டிரைவர்கள் அவசியம் ஆகும்). இதற்கான ஆதரவு அக்டோபர் 10, 2006 உடன் விலக்கப்பட்டுள்ளது.
[தொகு] சேவைப் பொதி 2
சேவைப் பொதி 2 மைக்ரோசாப்ட்டினால் ஆகஸ்ட் 6, 2004 இல் வெளியிடப்பட்டது. இது பெரும்பாலும் கணினிப்பாதுகாப்பு மேமப்டுத்தல்களைக் கொண்டிருந்தது. இதில் கம்பியற்ற இணைப்பை ஏற்படுத்தல் மற்றும் Bluetooth ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது.
[தொகு] சேவைப் பொதி 2 இற்குப் பிந்தைய மேம்படுத்தல்கள்
மைக்ரோசாப்ட் சேவைப் பொதி 2 இற்குப் பின்னர் வேறேதேனும் மேம்படுத்தல்களை அதிகாரப் பூர்வமாக வெளிவிடவில்லை. விண்டோஸ் சேவைப் பொதி 3 ஆனது 2008 ஆம் ஆண்டளவிலேயே வெளிவரும் என எதிர்பாக்கப்படுகின்றது. எனவே புதிதாகக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை நிறுவும் போது ஹாட்பிஸ் (Hotfix) என்கின்ற இயங்குதளச் சீர்திருத்தங்களை இயங்குதளத்துடன் ஒன்றிணைத்தால் இயங்குதளம் கூடுதல் பாதுகாப்புடன் இயங்கும். இதற்கு அதிகாரப் பூர்வமாக முறைகளை விட பிறிதோர் முறையே பெரிதும் கையாளப் படுகின்றது.
இதற்கு http://www.ryanvm.net/msfn/ தளத்தினூடாக இயங்குதள மேமப்டுத்தல்கள் கிடைகின்றன. இதை http://www.ryanvm.net/msfn/updatepack.html ஊடகவோ அல்லது பிட்ரொரெண்ட் முறையில் http://tracker.ryanvm.net/ ஊடாகவோ பதிவிறக்கம் செய்து விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியுள்ள கணினிகளில் Hot fixes ஐச் சேர்த்துக் கொள்ளலாம்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளியிணைப்புக்கள்
- விண்டோஸ் எக்ஸ்பி 64பிட் சோதனை மென்பொருள் பதிவிறக்கம் அதிகாரப்பூர்வத் தளத்தில் இருந்து (ஆங்கிலத்தில்)
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ |
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவையகம் 2003 |
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0 |
வரவிருப்பவை: எஃப்எல்பி (மென்பயனர்) | விஸ்ஃடா | சேவையகம் "லோங்ஹொர்ன்" | "வியன்னா" |