வேற்றுமை (தமிழ் இலக்கணம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெயர்ச் சொல்லொன்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும். [1]
தமிழில் எட்டு வேற்றுமைகள் உண்டு. அவை பின்வருமாறு:
- முதல் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை - உருபு இல்லை
- இரண்டாம் வேற்றுமை - உருபு ஐ
- மூன்றாம் வேற்றுமை - உருபு - ஆல், ஆன், ஒடு, ஓடு
- நான்காம் வேற்றுமை - உருபு - கு
- ஐந்தாம் வேற்றுமை - உருபு - இல், இன்
- ஆறாம் வேற்றுமை - உருபு - அது ஆது, அ
- ஏழாம் வேற்றுமை- உருபு - இல், கண், இடம்
- எட்டாம் வேற்றுமை - உருபு - விளிப் பொருளில் வரும்