பயனர்:Ravidreams
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெயர் |
அ.ரவிசங்கர் |
A.Ravishankar |
படிப்பு |
B.Tech (தொழில்சார் - உயிரித்தொழில்நுட்பம்) |
B.Tech (Industrial Biotechnology) |
சொந்த ஊர் |
Pudukkottai, Tamilnadu. |
|
தற்போதைய |
Leiden, The Netherlands. |
|
தற்போதைய ஈடுபாடு |
Ph.D student in Industrial ecology |
Ph.D student in Industrial ecology |
ஆர்வம் |
திரைப்படங்கள், உயிரித் தொழில்நுட்பம், திரை இசை, தமிழ். |
Biotechnology, Movies, Film Music, Tamil, Books. |
மின்னஞ்சல் |
ravidreams_03@yahoo.com |
|
பிறப்பு |
அக்டோபர் 1982 / october 1982. |
|
வலைப்பதிவு, வலைமனை |
[தொகு] விக்கிபீடியா மீதான ஈடுபாடு
மார்ச் 2005 முதல் தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களித்து வருகிறேன். என் பேராசிரியர் சொல்லக்கேட்டு ஆங்கில விக்கிபீடியா குறித்து அறிந்தேன். அங்கிருந்து தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்து இத்தளத்தை கண்டு அடைந்தேன். 2005ல் நான் உருப்படியாக முழுமையாக எழுதிய ஒரே கட்டுரை உயிரித் தொழில்நுட்பம் மட்டும் தான் :) நான் முழுக் கட்டுரைகளை எழுத முனையும் முன், இங்கு வரும் புதுப்பயனர்களுக்கு ஏதுவாக இத்தளத்தை பயன்பாட்டுக்கு எளியதாக மாற்ற வேண்டும் என எண்ணி, விக்கிபீடியா உதவிப்பக்கங்கள், மீடியாவிக்கி பக்கங்கள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் மொழி பெயர்ப்பதிலும், பொதுவாக விக்கிபீடியா தள பராமரிப்பிலும் ஈடுபாடு காட்டி வருகிறேன். உயிரியல் குறித்து நிறைய எழுத ஆவல். எனினும், அவற்றிற்கு தேவையான சரியான தமிழ் பதங்களை மற்ற பயனர்களுடன் கலந்துரையாடி தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி கலந்துரையாட நிறைய பேர் வேண்டும் என்பதால் அது வரை வெறும் குறுங்கட்டுரைகள் மட்டும் எழுத உத்தேசம் :)
2005ஆம் ஆண்டு கட்டுரைகள் எழுதுவதிலிருந்த முனைப்பு 2006 முதல் பாதியில் குறைந்தது. வேலைப்பளு, இணைய இணைப்பு இல்லாமை ஆகியவை முக்கிய காரணங்கள். தவிர, பல புதுப் பயனர்கள் ஏராளமான புதுக்கட்டுரைகளை உருவாக்கத்தொடங்கியதால், கட்டுரைகள் எண்ணிக்கையை தன்னந்தனியாய் உயர்த்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அண்மைக் காலங்களில், பிறர் கட்டுரைகள், விக்கிபீடியா கொள்கைகள் குறித்து கருத்து மட்டும் சொல்லிக் கொண்டு கருத்துக் கந்தசாமியாய் இருந்து வருகிறேன். பயனுள்ள பங்களிப்பு தான் என்று நம்புகிறேன். வழக்கம் போல், நிர்வாக உதவிகள், விக்கியாக்கங்களும் உண்டு. கன்னா பின்னா என்று பலக்கிய கட்டுரைகள் (எ.கா - கேண்டரின் குறுக்குக்கோடு, புணர்ச்சிப் பரவசநிலை) எழுதி சுந்தர் போன்றோர் பயமுறுத்தும் வேளைகளில், கட்டுரையே எழுதவதில்லை என்ற தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு வந்தால் போட்டிக்கு நானும் ஜோதிகா, சிம்ரன் என்று என்னால் இயன்ற பலக்கியக் கட்டுரைகள் எழுதி தேற்றிக்கொள்கிறேன் :) வருங்காலங்களில் பிற தமிழ் விக்கித் திட்டங்களில் அதிக கவனம் பகிர இருப்பதால், இங்கு கட்டுரைகள் எழுதுவது குறித்த திட்டமிட்ட இலக்கு எதுவும் இல்லை. என் பங்களிப்புகளின் ஆழம், அகலம், நீளம், உயரம், தடிமன் ஆகியவற்றை இங்கு பார்த்து அறியலாம். 2005 தொடக்கத்தில் ஒரு சில பயனர்கள் மட்டும் இருந்து கொண்டு அண்மைய மாற்றங்களில் ஏதேனும் மாற்றம் வருகிறதா என்று எதிர்ப்பார்த்திருந்த காலம் போய், தற்பொழுது அண்மைய மாற்றங்கள் பக்கம் முழுக்க கவனிக்க இயலாத அளவுக்கு பயனர் பங்களிப்புகள் அதிகரித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உலக அறிவு பெற தமிழறிவு மட்டும் போதுமானதாக இருக்க வேண்டும். அதற்கு உதவ வல்ல கருவியாக திகழக்கூடிய விக்கிபீடியாவிற்கு என்னால் இயன்றதை செய்யவதும் உண்மையான, உருப்படியான தமிழ் தொண்டு தான் என்பது எனது எண்ணமும் நம்பிக்கையும்.
[தொகு] உருவாக்க இருக்கும் கட்டுரைகள்
செல்வா அவர்கள் தந்த ஊக்கத்துக்காகவும் கோபி போன்றவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்காகவும் ;) சில கட்டுரைகளை எழுதிப் பார்க்க விரும்புகிறேன். அடுத்தடுத்து வர இருக்கும் கட்டுரைகள் கீழே:
- பரிசு
- நெதர்லாந்தில் பாலியல் தொழில்
- ரோட்டர்டாம்
- டென் ஹாக்
- ஆசிரியர்
- பள்ளி
- குழந்தை
- நட்பு
- அல்வா
- கண்ணாடி
- முட்டாள்கள் நாள்
- அன்னையர் நாள்
- ப்ருசல்ஸ்
- தொழிற் சூழலியல்
ஆர்வமுள்ள பிறரும் முந்தித் தொடங்கலாம் :)--Ravidreams 18:51, 22 பெப்ரவரி 2007 (UTC)