அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிசெம்பர் 14, 1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா, சுவிட்சர்லாந்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்ட அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் அகதிகளைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசின் அழைப்பினால் அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகள் மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவும் ஓர் ஐக்கிய நாடுகள் அமைப்பாகும்.
இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பைபின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் 1954 இலிலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.