நோபல் பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நோபல் பரிசு (Nobel Prize) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்த பரிசைப் பெற்றுக் கொள்ள மறுத்ததும் உண்டு. இது ஆல்பிரட் நோபல் என்பவரால் தொடங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப் படாமல் போனது உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்த பரிசு அறிவிக்கபடும். நோபல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், பொருளியல் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் இப்பரிசு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- நோபல் மின்-அருங்காட்சியகம் — அதிகாரப்பூர்வ தளம்
- The Nobel Committees of the Royal Swedish Academy of Sciences
- The Nobel Committee of the Karolinska Institute
- The Swedish Academy
- The Norwegian Nobel Committee
- The Nobel Prize Internet Archive — an unofficial site
- நோபல் பரிசு பெற்றவர்கள்-கால வரிசைப்படி
- The Nobel Prize
- Countries Ranked by Population to Nobel Prize Ratio