அண்டக் கதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வானியற்பியலில், அண்டக் கதிர் என்பது, பூமிக்கு வெளியே உருவாகிப் பூமியின் வளிமண்டலத்திலும், விண்மீன்களிடை ஊடகத்திலும் வந்து மோதுகின்ற, ஆற்றலூட்டப்பட்ட துணிக்கைகளைக் கொண்ட கதிர்வீச்சு ஆகும். உள்ளே வருகின்ற ஏறத்தாழ 90% அண்டக் கதிர்த் துணிக்கைகள் புரோத்தன்கள் (protons). 9% ஹீலிய அணுக்கருக்கள் (அல்பா துணிக்கைகள்). 1% இலத்திரன்கள் (electrons). இது கதிர் என்று அழைக்கப்பட்டாலும், இதன் துணிக்கைகள் தனித்தனியாகவே வருகின்றன. கதிர் வடிவிலோ அல்லது துணிக்கைகள் கொண்ட கற்றையாகவோ வருவதில்லை.