அப்பல்லோ 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்பல்லோ 11 ( Apollo 11 ) பயணத்திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும்.
- ஏவப்பட்டது: ஜூலை 16, 1969 39A ஏவுதளத்திலிருந்து
- திரும்பியது: ஜூலை 24, 1969
- பயணக்குழு: நீல் ஆம்ஸ்ட்ரோங், கட்டளை அலுவலர்; மைக்கேல் கொலின்ஸ், கட்டளைக் கூறு விமானி; எட்வின் ஈ. அல்ட்ரின், சந்திரக் கூறு விமானி.
- கட்டலைக் கூறு: கொலம்பியா
- சந்திரக் கூறு: ஈகிள்
- இறக்கம்: ஜூலை 20, 1969
- சந்திரனில் இறங்கிய இடம்: 1.1 வ, 23.8 கி -- அமைதிக் கடல் (Mare Tranquillitatis)
- பரப்பின் மேல்: 21.6 மணிகள்
- லூனார் EVA: 2.5 மணிகள்
- Samples: 22 கிகி
ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல் - நீல் ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ரோங் நிலவில் நடந்த முதல் மனிதரானார், அல்ட்ரின் அவரைத் தொடர்ந்தார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
[தொகு] பயணத்திட்டக் குறிப்புகள்
- ஜுலை 20ல், சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, "கொலம்பியா"விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினையும் சுமந்துகொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது.
- கவனமாகப் பார்த்துப் பரிசோதித்தபின், ஈகிள் அதன் இயந்திரத்தை இயக்கி இறங்கத் தொடங்கியது. சந்திர மேற்பரப்பை நோக்கி இறங்கும் போது, கண்காணிப்புப் புகைப்படங்களில் காணப்பட்டதுபோலன்றி, இறங்க உத்தேசித்திருந்த இடம், எதிர்பார்த்ததிலும் கூடிய பாறைப் பிரதேசமாய் இருந்ததை, விண்வெளிவீரர்கள் அவதானித்தனர். ஆம்ஸ்ட்ரோங், இக்கட்டத்தில், ஆளியக்கக் கட்டுப்பாட்டைக் கையாண்டு, மட்டமான நிலப்பகுதியொன்றில் இறங்குவதற்கு வழிகாட்டினார். இப் பிரதேசம் பின்னர் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்பட்டது.
- இறக்கத்தின் பின் ஆறரை மணி நேரம் கழிய, ஆம்ஸ்ட்ரோங், சந்திர மேற்பரப்பில் இறங்கி, அந்தப் பிரபலமான அறிக்கையை விடுத்தார்; "இது [ஒரு] மனிதனைப் பொறுத்தவரை, சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது பாரிய பாய்ச்சலாகும்." (அவர் பேசும்போது, "ஒரு" என்ற சொல் விடுபட்டு, பொருள் மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், சில வரலாற்றாசிரியர்கள், தாராள மனப்பாண்மையுடன், இது ஆம்ஸ்ட்ரோங்கின் தவறு என்பதிலும், தொலைத் தொடர்புக் கோளாறு என்றே கூறுகின்றனர்.)
- 21 மணி 36 நிமிடங்களின் பின்னர், ஈகிள் தனது ஏறும் இயந்திரத்தை இயக்கி, மீளும் பறப்புக்காகக் கொலம்பியாவுடன் இணைந்தது. விண்வெளிவீரர்கள் ஜூலை 24ல், பூமிக்குத் திரும்பியபோது, பெரும் வீரர்களாக வரவேற்கப்பட்டார்கள்.
கட்டளைக் கூறு வாஷிங்டன், டி.சி. யிலுள்ள, தேசிய ஆகாய மற்றும் விண்வெளி நூதனசாலையில், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சந்திரக் கூறு, ஜூலை 21, 1969 ல் வீசப்பட்டது. நிலவில் அது விழுந்த இடம் தெரியவரவில்லை. அப்பல்லோ சந்திர இறக்க ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் என்பதையும் பார்க்கவும்.
[தொகு] வெளி இணைப்புகள்
முன்னையது: அப்பல்லோ 10 |
அப்பல்லோ திட்டம் | தொடர்வது: அப்பல்லோ 12 |