அ. யேசுராசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அ. யேசுராசா (1945, குருநகர், யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், சிறுகதையாசிரியர், விமர்சகர், இதழாசிரியர் மற்றும் பதிப்பாளர் ஆவார்.
1968 முதல் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்துக்கள், விமர்சனம் போன்ற பல தளங்களில் தீவிரமாக இயங்கிவரும் அ. யேசுராசா ஓர் ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அதிகாரி ஆவார்.
திரைப்படங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அ. யேசுராசா 1979 - 1981 காலப்பகுதியில் யாழ். திரைப்பட வட்டத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றினார். தற்போது யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தின் திரைப்படக் காட்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
1975 இல் தொடங்கப்பட்ட அலை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான யேசுராசா 1990 வரை தொடர்ந்து செயற்பட்டு 35 இதழ்களை வெளியிட்டார். 1994 - 1995 காலப்பகுதியில் இளங்கவிஞர்களுக்கான இருமாத இதழான கவிதை இதழை வெளியிட்டார். 2003 மார்கழி முதல் தெரிதல் என்ற சிற்றிதழை வெளியிட்டு வருகிறார்.
அலை வெளியீடு மூலம் இதுவரை ஒன்பது நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
[தொகு] சஞ்சிகைகள்
[தொகு] இவரது நூல்கள்
- அறியப்படாதவர்கள் நினைவாக
- தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்
- தூவானம்
- பனிமழை