ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆரியச் சக்கரவர்த்தி முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில் அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் இருந்தான். மதிதுங்கன் தனி நின்று வென்ற பெருமாள் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றிருந்த இவன் ஈழ நாட்டுப் படையெடுப்பினை நடத்தி செவ்விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி எனவும் அழைக்கப்பட்டான். நல்லூர் இவன் வாழ்ந்த ஊரென்பதும் குறிப்பிடத்தக்கது.