இந்திய தேர்தல் ஆணையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஒரு தன்னாட்சி பெற்ற, பகுதியளவு நீதித்துறை போன்ற, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்களை நடுநிலையோடு நடத்தும்பொருட்டு நிறுவப்பெற்ற அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், துனை குடியரசுத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.