இராமேஸ்வரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராமேஸ்வரம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள ஊராகும். இது வங்காள விரிகுடாக் கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.