கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோயில் என்னும் சொல் 'கோ' + 'இல்' எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே 'கோ' என்பது இறைவனையும், 'இல்' என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். எனவே 'கோயில்' இறைவன் வாழுமிடம் என்னும் பொருளுடையது. வேறு மதத்துக்குரிய வணக்கத்தலங்களையும் சிலசமயம் கோயில் என்ற பெயரால் குறிப்பிடுவதுண்டெனினும், பொதுவாக இச் சொல் இந்து வணக்கத்தலங்களையே பெரும்பாலும் குறிக்கிறது.