இராவணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராவணன் (கி,மு 6000?) ஆண்டு இலங்கையினை ஆட்சி செய்த இராமாயணத்தில் தீயகதாபாத்திரமாக கூறப்படும் இலங்கையின் மன்னன் ஆவார். ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வழமாக காணப்பட்டது. மேலும் இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமயணம் கூறுகின்றது. அதே போல வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற இலங்கையின் ஊர் பெயர்களும் இதனை ஆதரிக்கின்றன. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவானாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரகளின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் வேறுபட்டு காணப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] குடும்பம்
இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன் கும்பகர்ணன் , சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்.
[தொகு] இராமயனத்தில் இராவணன்
இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்று, இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்தவன். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்தான். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர்களில் சிலர். இவனது அந்தப்புரத்தில் பல மனைவியர்களும் பெண்களும் இருந்தார்கள்.
[தொகு] வேத வித்தகன்
இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
[தொகு] இராவணனின் திராவிட மீளுருவாக்கம்
இராவணனைத் தமிழனாக அடையாளப்படுத்திய திராவிட மற்றும் தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றாளர்கள் அவனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள எதிர்நாயகனாகச் சித்தரித்தனர். அவனை நாயகனாகவும் வைத்து சில இலக்கியங்கள் புனையப்பட்டன. எப்படி இருப்பினும் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்ற இந்திய மரபுப் பார்வையே இராமாயணக் காப்பியக் கதையில் பொருந்தும்.
[தொகு] உசாத்துணை
- க.தங்கேஸ்வரி (ப - 8),ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய சமுதாயப் பணிகள்.
வால்மீகியின் இராமாயணம் |
---|
கதை மாந்தர் |
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகர் | மந்தாரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | Mandavi | Shrutakirti | விஸ்வாமித்ரர் | அகல்யா | ஜடாயு | Sampati | அனுமன் | சுக்ரீவன் | வாலி | அங்கதன் | Jambavantha | விபீசணன் | Tataka | Surpanakha | Maricha | சுபாகு | Khara | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | Mayasura | இந்திரஜித் | Prahasta | Akshayakumara | Atikaya | இலவன் | குசன் |
மற்றவர்கள் |
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | Vanara |