Wikipedia பேச்சு:உதவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
I would like to receive suggestions for naming convention of URLs.Do we name all the URLs in tamil wikipedia in tamil itself. For example, the help page listed in the navigation box has the URL in tamil, whereas the FAQS page has the URL in english. Which naming convention should be followed. This would help me to expand the help page and add URL names ina consistent manner. In the current help page I have named three URLs in english- namely the redirect page, picture tutorial page and contact us page., as I was not sure about the correct translations. Is திருப்பி விடப்படும் பக்கம் a right word for "redirect page"?.Looking forward to your suggestions.Thanks--ரவி (பேச்சு) 05:58, 31 மார் 2005 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] உதவிப்பக்கங்களை எப்படி மேம்படுத்தலாம் ?
பல புதுப்பயனர்களுக்கும் சில நீண்ட நாள் பயனர்களுக்கும் கூட விக்கபீடியாவை பயன்படுத்துவதில் பங்களிப்பதில் சிறு சிறு ஐயங்கள் அவ்வப்போது எழுகின்றன. பெரும்பாலும் இதற்கான விடைகளை ஆங்கில விக்கிபீடியா உதவிப்பக்கங்களில் தேடிப்பார்த்தால் கிடைத்து விடும். எனினும், முக்கியமான உதவிப்பக்கங்களை தமிழ் விக்கிபீடியாவிலும் உருவாக்க முயற்சி செய்தல் அவசியம். தற்பொழுது உள்ள உதவிப்பக்கங்களை எப்படி மேம்படுத்தலாம், எப்படி இன்னும் தெளிவாக விளக்கமாக எழுதலாம், இன்னும் என்னென்ன உதவிப்பக்கங்களை உருவாக்குதல் இவசியம்எ என்று தயவு செய்து இந்த பக்கத்திலோ அல்லது அந்தந்த உதவிப்பக்கங்களின் பேச்சுப்பக்கங்களிலோ தெரிவியுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 12:08, 1 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] உதவிப்பக்க பெயர்வெளி மாற்றம்
தற்சமயம் அனைத்து உதவிப்பக்கங்களும் விக்கிபீடியா பெயர்வெளியில் உள்ளன. அவற்றை உதவி பெயர்வெளிக்கு நகர்த்துவது பயனர்களுக்கு உதவியாக இருக்குமா? அப்படியெனில் எந்தெந்த பக்கங்களை நகர்த்தலாம் என்பது குறித்து உங்கள் ஆலோசனைகளை நாடுகிறேன். நன்றி.--ரவி (பேச்சு) 12:10, 1 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] எந்த புதுப்பயனர் பக்கத்தை முதன்மை படுத்துவது
முதற் பக்க பேச்சுப்பக்க உரையாடலுக்கு ஏற்ப புதுப்பயனர்களுக்கான உதவிப்பக்கம் ஒன்றை ஒவ்வொரு பக்கத்தின் உச்சியிலும் தருவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தற்சமயம் wikipedia:புதுப் பயனர் பக்கம் விக்கிபீடியாவிற்கு புதியவர்களுக்கு ஒரு பரந்த அறிமுகத்தை தருகிறது. wikipedia:பங்களிப்பாளர் கவனத்திற்கு பக்கம் புதிய பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக செயல்படக்கூடியது. வாசகர்களை வழிப்படுத்துவதை விட பங்களிப்பாளர்களை வழிப்படுத்துவது தான் மிக முக்கியம் என நான் நம்புவதால் wikipedia:பங்களிப்பாளர் கவனத்திற்கு பக்கத்தை பிரதானப்படுத்தலாம் என்பது என் கருத்து. இந்த இரண்டு பக்கங்களில் எதை பிரதானப்படுத்துவது என்று உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அப்புறம், மேற்கொண்டு என்னென்ன தகவல்களை இந்தப்பக்கத்தில் சேர்ப்பது நன்றாக இருக்கும் என்பதை குறித்தும் தெரிவிக்கவும். நன்றி.
[தொகு] உதவி பக்கங்களை சீரமைத்தல்
[தொகு] எளிமைப்படுத்தல்
ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து இறக்குமதி செய்த சட்ட திட்டங்கள், உதவிகள், வழிகாட்டிகளின் சுமை, எமது இரட்டை (duplicate) உதவிகள் வழிகாட்டிகளின் என்று அங்கும் இங்குமாக பல பக்கங்கள் உண்டு. அவை தெரியப்பட்டு, முக்கியமானவை மேம்படுத்தப்பட்டு ஏறக்குறைய 25 ஆக ஆக்கினால் நன்று. --Natkeeran 22:45, 18 நவம்பர் 2006 (UTC)
[தொகு] தமிழாக்கம் செய்யப்படவேண்டிய முக்கிய உதவி பக்கங்கள்
- வார்ப்புரு:நடை தொடர்புடையவை - இவ்வார்ப்புரு தமிழ் விக்கிபீடியாவுக்கு எற்பவும் மாற்று அமைக்கப்படவேண்டும்.
[தொகு] கலாவதியான உதவி பக்கங்கள் + தமிழாக்கம் செய்யப்படவேண்டியவை
- Wikipedia:Contact us - இதன் உள்ளடக்கத்துக்கும் தலைப்புக்கும் தொடர்பு அவ்வளவு தெளிவாக இல்லை. இந்த பக்கத்தை தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏற்ப மாற்று எழுத வேண்டும். மேலும் ஆங்கில விக்கி தொடர்பு பக்கத்துக்கு ஒரு இணைப்பு தந்தால் போதுமானது.