பேச்சு:உயிர்ச்சத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது.
ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
விட்டமின் என்ற நீக்கபடவுள்ள பக்கத்தின் உள்ளடக்கம் மேலே குறிப்புக்காக இடப்பட்டுள்ளது. --Natkeeran 16:24, 28 ஜனவரி 2006 (UTC)