எட்டுத்தொகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எட்டுத்தொகை நூல்கள் என்பவை பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேர தொகுக்கப்பட்டவை. இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.
எட்டுத்தொகை நூல்களாவன:
எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள்,
அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.
புறப்பொருள் பற்றியவை: புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது பரிபாடல்.
அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன.