கருப்பு மாம்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆப்பிரிக்கக் கருப்பு மாம்பா | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
![]() கருப்பு மாம்பா
|
||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
|
ஆப்பிரிக்கவிலே உள்ள ஒரு பாம்பு கருப்பு மாம்பா ஆகும். இதுதான் உலகிலேயே யாவற்றினும் மிக விரைந்து ஊரவல்ல பாம்பினம். மணிக்கு 11 கி.மீ விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவ்வகை பகலிலே இறைதேடுகின்றது. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இருக்கும் (ஓராள் நீளத்திக்கும் அதிகமாக). உடல் சாம்பல் நிறமாக இருதாலும், வாயுள் கருப்பாக இருப்பதால் கருப்பு மாம்பா என பெயர் பெருகின்றது. இது ஒரு நச்சுப் பாம்பு. ஒரு கடியிலே 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.