கல்கி (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை எழுத்தாளர் கல்கி பற்றியது. கல்கி என்ற பெயரில் அமைந்த தமிழ் வார இதழ் பற்றி அறிய கல்கி (இதழ்) ஐப் பார்க்கவும்.
கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும்.தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாக பூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புட்டமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் 1927-ல் வெளியானது.
[தொகு] தமிழிசை வளர்ச்சிக்கு பங்கு
சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலசக்ஷ்மி யுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை தரம் குறையுமா எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
[தொகு] கல்கி எழுதிய புதினங்கள்
- கள்வனின் காதலி (1937)
- தியாகபூமி (1938-1939)
- மகுடபதி (1942)
- பார்த்திபன் கனவு (1941 - 1943)
- சிவகாமியின் சபதம் (1944)
- அபலையின் கண்ணீர் (1947)
- சோலைமலை இளவரசி (1947)
- அலை ஓசை (1948)
- பொன்னியின் செல்வன் (1950-1955)
- தேவகியின் கணவன் (1950)
- மோகினித்தீவு (1950)
- பொய்மான் கரடு (1951)
- புன்னைவனத்துப் புலி (1952)
- அமர தாரா (1954)