பேச்சு:கல்கி (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரைக்கு கல்கி கிருஷ்ணமூர்த்தி சரியான தலைப்பாக இருக்கும். தேவையற்ற அடைப்புக்குறிகளைத் தவிர்க்கலாம்.--Kanags 09:13, 14 ஜூலை 2006 (UTC)
வழிமாற்றலும் தவறாக வழிமாற்றப்பட்டுள்ளது. கல்கி (எழுத்தாளர்), கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு வழிமாற்றப்படவேண்டும்.--Kanags 09:16, 14 ஜூலை 2006 (UTC)
- கல்கி, பரவலாக அறியப்பட்ட புனைப்பெயர். எனவே இத்தலைப்பில் கட்டுரை இருப்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை--ரவி 09:57, 14 ஜூலை 2006 (UTC)
கல்கி பொதுவாக மூன்று இடங்களில் பாவிக்கப்படுகிறது. முதலாவதாக கல்கி அவதாரம். விஷ்ணுவின் 10வது அவதாரம். கல்கி என்பது பொதுவாக இதையே குறிக்கும். மற்றது கல்கி கிருஷ்ணமூர்த்தி, கல்கி இதழ்.--Kanags 10:54, 14 ஜூலை 2006 (UTC)
- இவ்வகையான இடர்ப்பாடுகளுக்கு கல்கி என்ற தலைப்பின் கீழே ஏன் கல்கி (எழுத்தாளர்), கல்கி (அவதாரம்), கல்கி (இதழ்) என்று எழுதலாகாது? இதே போல, கொடி- ஒரு நாட்டின் கொடி, நிலைத்திணை (தாவர, செடியினக்) கொடி
போன்று பல இடங்களில் மாறுபடுகின்றது. சுப்பிரமணியன் என்று ஒரு தலைப்பைத் தொடங்கி அதன் கீழ் அது தொடர்பான பல்வேறு கட்டுரைகளுக்கு சுட்டுவழி செய்து தரலாம். முன்னர் ஏதோ ஒரு தலைப்புக்கு இவ்வாறு நான் அண்மையில் செய்தேன், நினைவில்லை.--C.R.Selvakumar 12:33, 14 ஜூலை 2006 (UTC)செல்வா
- கல்கி என்னும் இத்தலைப்பில் தான் நான் மேற்சொன்ன மாற்றம் செய்தேன்!! :)--C.R.Selvakumar 12:37, 14 ஜூலை 2006 (UTC)செல்வா
- அதாவது தேடுவோர் அடைப்புக்குறிகளுக்குள் ஏதும் இடாமல் தேட வேண்டும். கல்கி என்று தேடினால், அது கல்கி என்னும் தலைப்பைக் கொண்ட பக்கங்களைக் காட்ட வேண்டும். அதுதான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்.