கார்ல் பென்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கார்ல் பென்ஸ் (நவம்பர் 25, 1844 - ஏப்ரல் 4, 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.