பேச்சு:சிக்கலெண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டு பாடப் புத்தகங்களில் சிக்கல் எண் என்பர். செறிவெண் நல்ல சொல்லாகத் தோன்றுகிறது. எனினும், தேடுபவர் வசதிக்காக சிக்கல் எண்ணிலிருந்து வழி மாற்று கொடுக்கலாம். கட்டுரையிலும் அடைபுக்குறிகளுக்குள் தர வேண்டும்.--ரவி 09:18, 6 ஜூலை 2006 (UTC)
பார்க்க: பேச்சு:கலப்பெண் செற்வெண் என்ற தமிழாக்கத்தின் விளக்கம் தந்தால் நன்று. நன்றி. --Natkeeran 16:30, 6 ஜூலை 2006 (UTC)
- செறிவு என்றால் அடர்த்தி, நிறைவு மிகுந்தது என்று பொருள் (dense, complex, intricate). மிகப்பெரிய தொகுதியாகிய (கணம்) மெய் எண்ணே இதன் ஒரு பகுதி என்பதால், செறிவெண் என்பது அனைத்தையும் கொண்டது என்னும் பொருள் தருவது. செறிவான எண் (மெய்ப்பகுதி, கற்பனைப்பகுதி ஆகிய இரண்டையும் கொண்டு இருப்பது). --C.R.Selvakumar 16:50, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
-
- கலப்பெண் (மெய் + கற்பனை) சற்று கூடிய பொருத்துமாக படுகின்றதல்லவா? --Natkeeran 20:03, 6 ஜூலை 2006 (UTC)
- கலப்பெண் சரியென்றால் அதனையே ஆளுவதில் எனக்கு மறுப்பேதும் இல்லை. அதுவும் நல்ல சொல்லாகவே படுகின்றது. --C.R.Selvakumar 20:12, 6 ஜூலை 2006 (UTC)செல்வா
- பலக்கிய எண் என்று இராம.கி கையாண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். மாந்தன் முதலில் அறிந்தது தொகு எண்களே (integer numbers); பின்னால், அவற்றை நீட்டி அறுக்கை எண்கள் (பகு எண்கள் = rational numbers), அறுக்கொணா எண்கள் (பகா எண்கள் = irrational numbers), நொகை எண்கள் (negative numbers), இயல் எண்கள் (natural numbers), பலக்கிய எண்கள் (complex numbers) என ஒவ்வொரு மட்டத்திலும் வளர்ச்சியுற்று, இன்று எண்கோடு (number line) என்பது நீண்டுவிட்டது. [வளவு பதிவில் இருந்து] --செல்வராஜ் 21:05, 6 ஜூலை 2006 (UTC)
- கலப்பெண் (மெய் + கற்பனை) சற்று கூடிய பொருத்துமாக படுகின்றதல்லவா? --Natkeeran 20:03, 6 ஜூலை 2006 (UTC)
-
- தகவலுக்கு நன்றி செல்வராஜ். பல்கிய என்பதன் வழியாக பலக்கிய என்று ஆக்கி இருப்பார் என நினைக்கிறேன். அறுக்கொணா எண் நல்ல சொல் ஆனால் பகா எண் என்பது தன்னாலும் ஒன்றாலும் தவிர வேறு எந்த எண்ணாலும் பகாத் தனியெண்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். 1, 2, 3, 5, 7, 11, 13, என்னும் வரிசையை (prime numbers). கலப்பெண் அல்லது செறிவெண் என்பது சரியாக இருக்குமென நினைக்கிறேன். அறுக்கை என்பதற்கு பதிலாக பகு, வகு என்னும் சொற்களின் அடிப்படையில் ஆக்குவது நலமாக அமையும் என்பது என் கருத்து--C.R.Selvakumar 22:35, 6 ஜூலை 2006 (UTC)செல்வா.
பொருளடக்கம் |
[தொகு] கலப்பெண்
கலப்பெண் மெய் + கற்பனை கல்ந்து இருப்பது என்று சற்று கூடிய பொருத்தமாக தெரிகின்றது. உங்களுக்கும் அதற்கு உடன்பாடே, எனவே விரைவில் இக்கட்டுரையை மாற்ற இருக்கின்றேன். கலப்பெண் என்றே இனி பயன்படுத்தலாமா.--Natkeeran 23:09, 3 அக்டோபர் 2006 (UTC)
- நற்கீரன், கலப்பெண் என்பது பொருந்தும், எனினும், செறிவெண் என்பதே எனக்கு இன்னும் பொருத்தமாகத் தெரிகின்றது. செறிவு என்பது dense, complex என்னும் கருத்துக்களைத் தரும். கலப்பெண் என்பது mixed என்னும் பொருளைத்தரும். இரு சொற்களும் பொருத்தமாகவே இருப்பினும், செறிவெண் என்பதே கூடிய பொருத்தம் என்பது என் கணிப்பு. உண்மையில், செறிவெண் மிகவும் ஆழமான கருத்து. --C.R.Selvakumar 00:00, 5 அக்டோபர் 2006 (UTC)செல்வா
[தொகு] கலப்பெண் பக்கத்திலிருந்து
- கலப்பெண் - Complex Number
- கலப்பெண் தளம் - Complex Plane
- கலப்பெண் பின்னம் - Complex Fraction
- இணைக் கலப்பெண் - Complex Conjugate
- கலப்புக் கணியம், கலப்பு எண்ணுதி - Complex Quantity
- கலப்பெண் திசையன் வெளி - Complex Vector Space
[தொகு] பேச்சு:சிக்கலெண் பக்கத்திலிருந்து
செறிவெண் --Natkeeran 18:51, 20 பெப்ரவரி 2007 (UTC)
ஏற்கனவே செறிவெண், கலப்பெண் ஆகிய கட்டுரைகள் உள்ளன. இப்பெயர்களில் தமிழக, ஈழத்துப் பாடநூல்களில் பயன்படும் சிக்கல் எண் அல்லது சிக்கலெண் என்பதே முதன்மைத் தலைப்பாக இருப்பது பொருத்தமாகப் படுகிறது. --கோபி 18:56, 20 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] பேச்சு:கலப்பெண் பக்கத்திலிருந்து
தமிழ்நாட்டில் இதை சிக்கல் எண் என்றும் சொல்வார்கள். இதையும் கட்டுரையில் குறிப்பிடலாம்--ரவி 22:05, 21 ஜனவரி 2006 (UTC)
- இலங்கையிலும் இதைச் சிக்கலெண் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். கலப்பெண் என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. Mayooranathan 17:29, 22 ஜனவரி 2006 (UTC)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத் தளத்திலுள்ள கலைச்சொல் அகராதிகளில் தேடிப்பார்த்தேன். தமிழ்ப் பல்கலைக்கழக அகராதி Complex number என்பதற்கு கலப்பெண் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. கலைக்கதிர் அகராதி, இலங்கை அரசின் கலைச்சொல் அகராதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன அகராதி ஆகியவற்றில் சிக்கலெண் என்ற சொல்லே காணப்படுகின்றது. Mayooranathan 17:43, 22 ஜனவரி 2006 (UTC)
பரவலான பயன்பாட்டில் உள்ள சிக்கலெண் என்பதையே பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு குழப்பம் விளைவிக்கமல் இருக்க உதவும். கலப்பெண் என்ற பக்கத்தை சிக்கலெண் கட்டுரைக்கு வழிமாற்றி விடலாம்--ரவி 17:50, 22 ஜனவரி 2006 (UTC)
ரவி, மயூரநாதன் கலப்பெண் என்பது பொருள் ரீதியாக மிகவும் பொருந்துகின்றது. இரண்டு பரினாமங்களை இவ்வெண் கலந்து வெளிப்படுத்துவதால் கலப்பெண் என்று வந்திருக்கலாம் என்பது என் ஊகம். ஆங்கிலத்தில் அப்பெயர் எழ காரணம் என்ன என்று தெரியவில்லை, ஆனால் அது வரலாற்று காரணமாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. சிக்கலெண் ஒரு நேரடி மொழிபெயர்ப்பு, கருத்து ரீதியாக அவ்வளவாக பொருந்தவில்லை. மேலும், தமிழ் இணைய பல்கலைக்கழக அகராதியில் இரண்டும் இருப்பதால், இதை பற்றி மேலும் சற்று அலசி விட்டு தீர்மானிக்கலாம் என்பது என் கருத்து. --Natkeeran 18:09, 22 ஜனவரி 2006 (UTC)
- இலங்கை அரசின் கலைச்சொல் அகராதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன அகராதி இரண்டிலும் இருக்கும் வழக்கைப் பயன்படுத்துவதே பொருத்தமாகப் படுகிறது. கோபி 20:34, 18 பெப்ரவரி 2007 (UTC)
பொது வழக்கிலில்லாத ஒரு சொல்லை முதன்மைப்படுத்தலாமா? --கோபி 22:16, 20 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] செறிவு என்றால் concentration
செறிவு என்றால் concentration என்று பொருள் தரும் எனவே, இந்த சொற் பயன்பாடும் இன்னும் கோள்விக்குரியதே...--Natkeeran 03:54, 1 மார்ச் 2007 (UTC)
நான் ஏற்கனவே உங்கள் கேள்விக்கு என் பேச்சுப் பக்கத்தில் இட்டதை இங்கே கொடுத்துள்ளேன்.
தமிழ் லெக்சிகனில் கூறியுள்ளதையும் நோக்குக குறிப்பாக (பொருள்கள் 1, 2, 3, 5):
செறிவு (p. 1621) [ ceṟivu ] n ceṟivu . < செறி¹-. 1. Thickness, denseness, closeness; நெருக்கம். செறிவுடை மும் மதில் (திருவாச. 9, 5). 2. Abundance, fulness; மிகுதி. அரும் புலத்தின் செறிவு மீதே (கம்பரா. உருக் காட்டு. 111). 3. Union, combination; கூட்டம். இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (குறள், 684). 4. Relationship; friendship; உறவு. செறி வெனப்படுவது கூறியது மறாமை (கலித். 133). 5. Diffusion, permeation, expansion; கலப்பு. (W.) 6. Kernel, as attached to the shell of a nut; உள்ளீடு நுங்கினது இனியசெறிவை அயில (புறநா. 225, உரை). 7. Self-restraint, modesty; தன்னடக் கம். முதுவருள் முந்துகிளவாச் செறிவு (குறள், 715). 8. Conformity to rules, as of propriety; எல்லை கடவாநிலைமை. (திருக்கோ. 179, உரை.) 9. (Rhet.) Compactness, terseness, as a merit of poetic composition; நெகிழிசையின்மையாகிய செய்யுட் குணம். (தண்டி. 15.)
செறிவெண் என்பதின் ஆழம் தெரியாமல், பொருள் பொருத்தம் தெரியாமல் சிக்கலெண் என்று இருக்கவேண்டும் என்று வலிந்து மாற்றுவது பற்றி நான் என்ன சொல்ல? அறிந்து கூறினாலும் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாதிட்டால் என்ன கூறமுடியும்?! செறிவெண் என்றே இருக்கவேண்டும் என்பது என் பரிந்துரை. --செல்வா 16:32, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, எனக்கு ஆழம் தெரியவில்லை; பொருள் தெரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல கட்டுரை. இதை விளங்கிக் கொள்ள முடியாத தலைப்பாற் பய்னில்லை. செறிவெண் வழிமாற்றியாகவே உள்ளது. கட்டுரையிலும் அடைப்புக்குறியுள் பயன்படுத்தலாம். ஆனால் உங்களுக்கும் எனக்கும் ஆழம் தெரிகிறது என்பதற்காக தமிழக, இலங்கைப் பாடநூல்களில் பயன்படும் சொல்லைவிட்டுவிட்டு இதனைப் பயன்படுத்துவது சிறிதும் நல்லதல்ல. பிற பயனர் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.கோபி 16:37, 20 மார்ச் 2007 (UTC)
- கோபி, அறிவுத்துறைகளில் தமிழில் இன்னும் வளர்ச்சி இல்லை. திருந்தாத இன்றைய நிலையில், இப்படிப் பிடிவாதமாக இருப்பதால் பயன் குன்றுமே அன்றி பயன் வளராது. வளர்ந்தாலும் செழிப்பான வளர்ச்சியாகாது. இலங்கை, தமிழ்நாடு பாடநூல்கள் நல்ல துறையறிஞர்களைக் கொண்டு செம்மைப்படுத்தப்பட வேண்டியன எவ்வளவோ. உங்களுக்கும் எனக்கும் ஆழம் தெரிந்திருந்தால், பொருத்தமாக இருந்தால், திருந்தாத இன்றைய நிலையில் மாற்றுவது தவறாகாது. மேலும் நீங்கள் சொல்லித்தான் சிக்கல் எண் என்று ஒரு சொல் இருப்பதே எனக்குத் தெரியும், நான் மாற்றும் நோக்கில் இச்சொல்லைப் பரிந்துரைக்கவில்லை. இத்தலைப்பில் ஒரு கட்டுரை வேண்டும் என்று நான் ஆங்கில விக்கையைப் பின்பற்றி ஆக்கினேன். Complex Numbers என்பது மிகவும் ஆழமான கருத்து. அதன் ஆழம் தெரியாமல் சிக்கல் எண் என்று மேம்போக்காக மொழிபெயர்த்தல்
(மேந்தலை, முண்டக்கூவல் போன்று) சரியில்லை. சிக்கல் எண் என்பது மேந்தலை முண்டக்கூவல் போல் முற்றிலும் பொருந்தாதது அல்ல, எனினும் மேம்போக்கான பெயர்ப்பு. --செல்வா 17:18, 20 மார்ச் 2007 (UTC)
-
- பொதுத்தரம் என்று வரும்பொழுது stability முக்கியம். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 50 ?? ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்து என்பது இங்கு குற்க்கதக்கது. இங்கு எந்த சொல்லை முன்னிறுத்துவது என்பதுதான் சிக்கல்? --Natkeeran 17:25, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, நீங்கள் செறிவெண் என்பதே பொருத்தமானது என்று சொல்வதைப் பற்றியதல்ல என் கருத்து. சிக்கலெண் பொதுப் பயன்பாட்டுச் சொல். அது பொருத்தமற்றதாக இருந்தாலும்கூட இங்கு மாற்றங் கொண்டுவருவது சரியமல்ல. பாடநூல் ஆக்கக் குழுக்கள் பயன்படுத்திய சொற்களில் பல பிழைகள் இருக்கலாம். புதிதுசேர்ப்புக்களும் மாற்றங்களும் அவசியமே. ஆனால் அதற்கான இடம் த.வி. இல்லை. நாம் இங்கு செறிவெண் சரியானது என்று எழுதிவிட்டுப் போக பாடநூல்களில் யாராவது கலப்பெண்தான் பொருத்தம் என்று வாதிட்டு மாற்றிக் கொண்டிருந்தால் எல்லாம் வீண்வேலையாகிவிடாதா? சிக்கலெண் கட்டுரையிலேயே செறிவெண் என்பது பொருத்தமானது என்பது பற்றிய பகுதியை உருவாக்கலாம். அது இக்கட்டுரையைப் பயன்படுத்தப்போகும் இளையவர்களுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கும். அதைவிடுத்துத் தலைப்பே செறிவெண் என்றிருந்தால் வாசிப்பவருக்குப் பொருளும் விளங்காத குழப்ப நிலையே எஞ்சும். கோபி 17:27, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, நல்ல சொற்களை ஆள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால், அதை எங்கு தொடங்கி எப்படி செய்வது என்பதில் தான் கருத்து வேறுபாடுகள். செறிவெண் கட்டுரையை முதன்மைப்படுத்தி சிக்கலெண் என்பதை கட்டுரையில் அடைப்புக் குறியில் தந்தாலும், பிற கட்டுரைகளில் செறிவெண் என்ற சொல் வரும்போதெல்லாம் சிக்கலெண் என்று கட்டுரையில் தர முடியாதல்லவா? அண்மைய நுட்பங்கள், புதிய சொற்களைத் தயங்காமல் த.வி-யில் அறிமுகப்படுத்துகிறோம். ஆனால், இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வரும் சொற்களை தடாலென மாற்றுவதை யோசிக்க வேண்டி இருக்கிறது. கோபி கூறியபடி , கட்டுரையின் ஒரு பகுதியில் புதிய, மாற்று சொற்கள் குறித்து குறிப்புகள் தருவது மாணவர்கள் புரிந்து கொள்ளவும், இந்த விவாதத்தை வேறு களங்களில் தொடரவும் வழி வகுக்கும். சொல் தேர்வுப் பக்கத்தில் சில நடைமுறைக் கேள்விகளைக் கேட்டு இருந்தேன். (ஆசிரியர் தடை, ஆண்டாண்டுக்கும் சொல் மாற்றங்கள்) அது குறித்தும் நீங்கள் தெளிவுபடுத்தலாம். --ரவி 19:09, 20 மார்ச் 2007 (UTC)
[தொகு] செறிவெண்-சிக்கலெண்
கோபி, ரவி நீங்கள் சொல்வதை நன்றாக உணர்பவன் நான். நான் ஒரு மாணவனாய் இருந்தால், சிக்கல் எண் என்று கற்று இருந்தால், அதைப்பற்றி மேலும் அறியவோ, அது பற்ரிய ஒரு கருத்தில் தெளிவு பெறவோ, த.வி-யை நாடினால், நான் சிக்கலெண் என்று தேடு பட்டையில் இடுவேன். அது என்னை xxx என்னும் கட்டுரைக்கு இட்டுச்செல்லும். அங்கே இருப்பது கோர்வையாக இருந்தால் பெறவேண்டிய அறிவைப் பெறுவேன். இதனால் குழப்பம் பெரிதாக ஏதும் இல்லை. சிக்கலெண்னை xxx என்று கொடுத்துள்ளார்கள் என்று உணர்வர் - அதுவும் முதல் வரியிலேயே அது உணரப்படும். தவறுகளை ஏன் பெருக்கவேண்டும்? நிங்கள் கூறுவதுபோல இலட்சக்கணக்கான தமிழர்கள் சிக்கல் எண் என்பது பற்றி ஆழப் படித்து ஊறிப்போன ஒரு சொல் இல்லை என்பது என் நினைப்பு. என் கவலை என்னவென்றால் இப்படி பாடநூல் கூறுகின்றது என்று காசுப் பாய்ச்சல், மேந்தலை முதலான மிகத்தவறான சொற்களை ஆள்வது பற்றித்தான் (சிக்கலெண் என்பது இத்தகைய தவறான சொல் அல்ல). கொள்கை அளவில் (1) இலங்கை - தமிழ்நாடு கலைச்சொல் ஆட்சிக் குழப்பங்கள், (2) பொருத்தம் அல்லா சொல்லாட்சிகள் பாடநூல்களிலோ பிற இடங்களிலோ இருப்பின் அதனை இங்கு த.வி-யில் ஆள்வது பற்றியும் வேறு சொல் ஆள்வது பற்றியும் ஒரு தெளிவு இருத்தல் வேண்டும். த.வி-யில் இவைகளைக் குறிக்கவேண்டும் என ஒப்புகிறேன், ஆனால் நாம் தன்னிறைவாக கட்டுரைகள் ஆக்கும்பொழுது, அதில் தகுந்த சொல்லாட்சிகளை பயன்படுத்தத் தயங்கக் கூடாது என்பது என் கருத்து. த.வி-க்கு என நாம் ஒரு தரம் கொள்வதில் தவறில்லை - இயன்றவிடங்களில் எல்லாம் பிற நடைமுறை போக்குகளை அணைத்துச் செல்லவேண்டும், ஆனால் மற்ற இடங்களின் நாம் சரி என்று நன்கு அறிவதை முன்னிலைப்படுத்திச் செல்லலாம் - செல்லவேண்டும். தவறுகளை பெருக்க த.வி பொருத்தமான இடம் இல்லை :) (நான் விளையாட்டாக எழுதுகிறேன், யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளவேண்டாம்). --செல்வா 19:50, 20 மார்ச் 2007 (UTC)
செல்வா, காசுப்பாய்ச்சல், மேந்தலை போன்ற சொற்களின் குறைபாடு அளவுக்கு சிக்கல் எண்ணின் குறைபாடு இல்லை என்பது ஒரு காரணம். இரண்டு, சிக்கல் எண் போன்ற சொற்கள் உயர்நிலைக் கல்வி அளவிலேயே அறிமுகமாகும் சொற்கள். இவற்றில் கை வைக்கத் தான் தயக்கமாக இருக்கிறது. ஏற்கனவே, தமிழ் விக்கி நடை கடினமாக இருக்கிறது இருக்கிறது என்று ஒரு பரவலான விமர்சனம் இருக்கிறது. இதில், அடிப்படை சொற்களிலும் கை வைத்தால் தமிழ் விக்கிபீடியா எந்தளவுக்கு ஏற்கப்படும் என்பதும் தயக்கமாக இருக்கிறது. ஏற்கனவே, இலங்கைக்கும் தமிழகத்துக்கும் நிறை போன்ற சொற்களின் புரிதலில் வேறுபாடு இருக்கிறது. இதில் நாம் வேறு புதுச் சொல் புகுத்தினால் ஒரு மாதிரி அயர்வாக இருக்கிறது :( பாடப் புத்தக்கங்களை மாற்றுகிற அளவுக்கு தமிழ் விக்கியின் தாக்கம் இருக்குமா என்று சொல்ல இயலவில்லை. குறைந்தபட்சம், அது ஒரு சில ஆண்டுகளுக்குள் நிகழப்போவதில்லை. பாடப் புத்தகத்தில் இப்படி, தமிழ் நாட்டில் இப்படி, இலங்கையில் அப்படி. தமிழ் விக்கிபீடியாவில் இன்னொரு மாதிரி என்று இடத்துக்கு ஒரு சொல் வந்தால் குழப்பம் வந்தால் நாம் நல்ல சொல் ஆண்டும் பயனில்லாமல் போக நேரிடும். சமூக வழக்கத்தை மாற்ற தமிழ் விக்கி ஒரு கருவியா இல்லை சமூக நிகழ்வைக் காட்ட தமிழ் விக்கி ஒரு கருவியா என்பது முக்கிய கேள்வி. சமூக மாற்றத்தை வேண்டுவோர் நேரடியாகவே களத்தில் இறங்கிச் செயல்படுவது உடனடி விளைவைத் தரும் என்று தோன்றுகிறது. நாம் சரியாகவே எழுதினாலும், காலத்துக்கும் பாடப்புத்தகங்கள் மாறாமல் இருக்குமானால் அதனால் என்ன பயன் சொல்லுங்கள்?--ரவி 20:07, 20 மார்ச் 2007 (UTC)
- த.வி கருத்துக்களைப் பிழையில்லாமல் தரும் ஒரு நல்ல கலைகளஞ்சியமாக (க.க) இருக்க வேண்டும். அதுவே குறிக்கோள். குமுகத்தை (சமூகத்தை) மாறுவதல்ல குறிக்கோள். ஒன்றை நன்றாகச் செய்தால் அதன் பயன் நெடுநாளைக்கு நிற்கும். த.வி ஏற்கப்படுமா, ஏற்கப்படாதா என்பதைக் காட்டிலும், ஒன்று தெளிவாக எழுதப்பட்டுள்ளதா, எவ்வளவு கருத்துக்கள் தரப்பட்டுள்ளன, பிழை இல்லாமல், உறுதிகொள்ளுமாறு கருத்துக்கள் தரப்பட்டுள்ளனவா என்று எண்ணுதும் செயல்படுவதுமே நாம் ஆற்றக்கூடியது. ரவி, இங்கு "சமூக மாற்றம்" ஏதும் நான் வேண்டவில்லை. நிறை என்பதை mass என்பதற்கும், எடை என்பதை weight என்பதற்கும் பயன்படுத்தலாமா என்று கேட்ட கேள்வி எங்கெங்கோ சென்று விட்டது! --செல்வா 21:20, 20 மார்ச் 2007 (UTC)
பரவாயில்லை, செல்வா. எடை, நிறையை விட்டு விவாதம் விலகினாலும் இது போன்ற உரையாடல்கள் நம்மில் ஒரு புரிந்துணர்வையும் விக்கிபீடியா கொள்கைகளையும் வகுக்கு உதவுகிறது. இதே போன்ற கருத்துக்களை அலசும் உரையாடல்களை நாளை தவிர்க்கலாம். தமிழ் நடை குறித்த விக்கி கொள்கைகள் இப்படி உருவானவை தான். சமூகத்தை மாற்றுவதற்காக இந்த முயற்சிகள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நாம் செய்வனத் திருந்தச் செய்ய வேண்டியதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், செய்யப்படுவனவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கவலையையும் இங்கு கவனிக்க வேண்டும். "தமிழ் விக்கியில் மாத்தி மாத்தி எழுதுறாங்க, ஒன்னும் புரியலை" என்பது போல் ஒரு கருத்து, குழப்பம் பரவினால் அது நம் அனைவரின் கூட்டு உழைப்பையும் பயனற்றதாக்கி விடக்கூடுமே என்பது தான் எங்கள் கவலை--ரவி 21:43, 20 மார்ச் 2007 (UTC)
- இதற்கான மறுமொழி Wikipedia சொல்தேர்வு பக்கத்தில் இட்டுள்ளேன்.--செல்வா 21:56, 20 மார்ச் 2007 (UTC)