சின்னுவ அச்சிப்பே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சின்னுவ அச்சிப்பே (பி. நவம்பர் 16, 1930 நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின்றன.
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட honorary பட்டங்களை இவருக்கு வழங்கியுள்ளன.