இங்கிலாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது. ஆங்கில மொழியும் ஆங்கிலத் திருச்சபையும் உருவான நாடு இதுவாகும். பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே கைத்தொழிற் புரட்சியும் தொடங்கியது.