சிப்பாய்க்கலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிப்பாய்க்கலகம் (1857) இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது.
[தொகு] சிப்பாய்க்கலகத்தின் முன்னோடி நிகழ்வுகள்
இந்தியத்துணைக்கண்டத்தில் நிகழ்ந்த வெள்ளையர் எதிர்ப்புகளிலேயே சிப்பாய்க்கலகமே அளவிலும் பங்கேற்பிலும் பெரியதாகையால் அதுவே இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படுகிறது. ஆயினும் நாடெங்கிலும் அதற்கு முன்பே பல இடங்களிலும் பல்வேறு மன்னர்களிடமிருந்தும் வெள்ளையர் ஆட்சிக்கு எதிர்ப்புகள் இருந்துவந்துள்ளன.
1857 இல் வெடித்த சிப்பாய்க்கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு அதில் வெற்றி பெற்றார்.
அதிலிருந்து தொடங்கி 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது பாண்டியர் தலைமையிலும் ஆங்கிலேய எதிர்ப்பு எதிரொலித்தது.
பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது.