சி. இராஜகோபாலாச்சாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. இராஜகோபாலாச்சாரி (1878 - 1972) தமிழகத்தில் சேலம் நகரில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். இராஜாஜி என்று அழைக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸில் பெரும் பங்கு வகித்தவர். 1952 வரையில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
பிற்காலத்தில் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திரா கட்சியினைத் துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967 ல் திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போது பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.