கர்நாடகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்நாடகம் | |
![]() கர்நாடகம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | பெங்களூர் |
மிகப்பெரிய நகரம் | பெங்களூர் |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
டி. என். சதுர்வேதி தரம் சிங் |
ஆக்கப்பட்ட நாள் | 1 நவம்பர் 1956 |
பரப்பளவு | 1,92,000 கி.மீ² (8வது) |
மக்கள் தொகை ([[{{{கணக்கெடுப்பு ஆண்டு}}}]]) அடர்த்தி |
5,58,68,200 (9வது) 290.98/கி.மீ² |
மாவட்டங்கள் | 27 |
கர்நாடகம் (Karnataka) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. கர்நாடகத்தின் தலை நகரம் பெங்களூர். மங்களூர், மைசூர் ஆகியன ஏனைய பெரிய நகரங்களாகும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியமைப்பு
கர்நாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கர்நாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கர்நாடகத்தில் தொடங்குகிறது.
[தொகு] மாவட்டங்கள்
கர்நாடக மாநிலம் 27 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 27 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நாள்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும்.
- பெங்களூர் ஆட்சிப்பிரிவு
- பெல்காம் ஆட்சிப்பிரிவு
- பாகல்கோட் மாவட்டம்
- பெல்காம் மாவட்டம்
- பிஜப்பூர் மாவட்டம்
- தார்வாட் மாவட்டம்
- கதக்மாவட்டம்
- ஹவேரி மாவட்டம்
- உத்தர கன்னடம் மாவட்டம்
- குல்பர்கா ஆட்சிப்பிரிவு
- பெல்லாரி மாவட்டம்
- பிதர் மாவட்டம்
- கொப்பல் மாவட்டம்
- ராய்ச்சூர் மாவட்டம்
- மைசூர் ஆட்சிப்பிரிவு
- சிக்மகளூர் மாவட்டம்
- சாம்ராஜ்நகர் மாவட்டம்
- தெற்கு கன்னடம் மாவட்டம்
- ஹஸ்ஸன் மாவட்டம்
- கொடகு மாவட்டம்
- மாண்டியா மாவட்டம்
- மைசூர் மாவட்டம்
- உடுப்பி மாவட்டம்
[தொகு] மொழிகள்
கர்நாடகத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழி கன்னடம். இதுவே கர்நாடகத்தின் அதிகாரப்பூர்வ மொழியுமாகும். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, துளு ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது.
[தொகு] பொருளாதாரம்
கர்நாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கர்நாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன.
[தொகு] வெளி இணைப்பு
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | ![]() |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |