செமிடிக் மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செமிடிக் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா |
பொது வகைப்படுத்தல்: |
ஆபிரிக்க-ஆசிய செமிடிக் |
துணைக்குழுக்கள்: |
செமிடிக் மொழிகள் என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் நடுகிழக்கு, வட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிடிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிடிக் மொழிகள் விளங்குகின்றன.
இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிடிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.
[தொகு] செமிடிக் மொழிக் குடும்ப வகைப்படுத்தல்
குறிப்பு1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. முதன்மையான இரண்டு வகைகளும் சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. பின்வரு படிமம் தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலை காட்டுகிறது. மேலதிக விபரங்களுக்கு அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளை நோக்கவும்.