ஜி. யு. போப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 12, 1908) அமெரிக்காவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
வட அமெரிக்காவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் நோவா ஸ்கோஷியா என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
[தொகு] தமிழ்நாட்டிற்கு வருகை
விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
இவர் தன் கல்லறையில் "ஓர் தமிழ் மாணவன் உறங்குகிறான்" என்று எழுதும்படி வேண்டிக்கொண்டார்.
[தொகு] வெளி இணைப்பு
- ஜி.யு. போப்பைப் பற்றிய தரவு (ஆங்கிலத்தில்)