டாம் ஸ்மோல் லினக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Damn Small Linux 1.4 |
|
Website: | http://www.damnsmalllinux.org/ |
Company/ developer: |
John Andrews, et al. |
OS family: | லினக்ஸ் |
Source model: | திறந்த நிரல் |
Latest stable release: | 3.1 / நவம்பர் 29, 2006 |
Kernel type: | Monolithic kernel |
Default user interface: | Fluxbox |
License: | திறந்த இலவச மூலநிரல் |
Working state: | Current |
டாம் ஸ்மேல் லினக்ஸ் (டிஎஸ்ஸெல் என்றும் அறியப்பட்ட) லினக்ஸ் வழங்கல் பழைய கணினிகளை வீணாக்காமல் லினக்ஸை நிறுவிப் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
டிசம்பர் 16 2006 இன் படி இது லினக்ஸ்வழங்கலை அவதானிக்கும் டிஸ்ரோவோச் (டிஸ்ரோவாச்) இணையத்தளத்தில் 8 ஆவதாகவுள்ளது (இது பக்கங்களைப் பார்வையிடுவதைக் கணிப்பிடுதல் மூலம் நிரலிடுகின்றது). இது பழையகணினிகளில் லினக்ஸைப் பாவிப்பதற்கான ஆர்வத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இதன் முழுமையான பதிப்பிலுள்ள சிறிய அளவினால் ஏனைய இயங்குதளங்களைப் போலல்லாமல் மிகச் சிறிய இடவசதியிலேயே இயங்கக் கூடியது. இது சிறிய இறுகுவட்டு மற்றும் 64 மெகாபைட் அளவான யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மற்றும் ஜிப்டிரைவ், மற்றும் கொம்பக்ட் (கம்பக்ட்) ஊடாக இயங்கக் கூடிய்து.
பொருளடக்கம் |
[தொகு] ஆரம்பம்
டாம் ஸ்மோல் லினக்ஸ் ஜான் அன்ரூஸ்ஸினால் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் பல்லாயிரக்கணக்கான தனார்வலர்களல் இந்தத்திட்டம் மேலும் மேம்படுத்தப் பட்டது.
டாம் ஸ்மோல் லினக்ஸ் நொப்பிக்ஸ் லினக்ஸைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.
[தொகு] வசதிகள்
டிஎஸெலின் தற்போதைய பதிப்பு 3.1 ஆகும். இது நவம்பர் 28, 2006 இல் வெளிவந்தது. இதிலுள்ள வசதிகள்
- இணைய உலாவிகள்
- பயர்பாக்ஸ்
- டிலோ
- நெட்றிக்
- மின்னஞ்சல் கிளையண்ட்
- இணைய சேவர் (மங்கி இணைய சேவர்)
- AxY GTK , FTP கிளையண்ட்
இவற்றுடன் ஒப்பிண் ஆபிஸ் போன்றவை இணையத்தளமூடாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கூடியவை.
[தொகு] ஆரம்பிக்கும் தேர்வுகள்
இதை ஆரம்பிக்கும் போது எத்துக் குறியீடுகளை இட்டு இதை ஆரம்பிக்கலாம் அவ்வாறில்லாம் விசைப்பலகையில் எதையும் தட்டசுச் செய்யாமால் விட்டுக் கணினியை ஆரம்பித்தால் வழமையான கணினியின் பாகங்களைக் கண்டுபிடித்து கணினியை ஆரம்பிக்கும். சிலவேளைகளில் கணினியின் வன்பொருட் பாகங்களை கண்டுபிடிகாது என்பதையும் கவனத்திற் கொள்ளவும்.
[தொகு] பதிப்புக்கள்
[தொகு] லைவ் சிடி
டிஎஸேல் கணினியின் வன்வட்டு இல்லாமல் ஆரம்பிக்கக் கூடிய லினக்ஸ் வழங்கல்களில் ஒன்றாகும். இது ராம்டிஸ்கைப் பாவித்துக் கணினிகளின் ராமில் நிறுவி இயங்கக் கூடியது. இது எக்ஸ்விண்டோவை இயக்கக்கூடியது. ஓரளவு முழுமையான டெஸ்க்டாப்புடன் விளிப்பூட்டும் கட்டளைகளையும் கொண்டுள்ளது.
[தொகு] வன்பொருட் தேவைகள்
டிஎஸெல் x86 கணினிகளில் இயங்கக் கூடியது. இது 386, 486, பென்ரியம் வகைக் கணினிகள் மற்றும் வயா சீ3 கணினிகள் ஏஎம்டி புரோச்சர்களிலும் இயங்கக் கூடியது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளியிணைப்புக்கள்
- டாம் ஸ்மோல் லினக்ஸ் (ஆங்கிலத்தில்)
- எவ்வாறு டிஎஸெல் லினக்ஸைப் பாவிப்பது? (ஆங்கிலத்தில்)