தமிழர் சிற்பக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
பொருளடக்கம் |
[தொகு] தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள்
அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன." மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."
[தொகு] சோழர் உலோகப்படிம நுட்பம்
[தொகு] ஆனந்தத் தாண்டவ நடராசன்
[தொகு] சிற்பங்கள்
[தொகு] ஆதாரங்கள்
- அ. தட்சிணாமூர்த்தி. (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும். சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.