தமிழ் - ஒலியனியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] தமிழ் - ஒலியனியல்
மனிதன் பேசும் மொழிகள் அனைத்தும் அவரவர் மொழி ஒலியன்களால் ஆக்கப்படுபவையே.
[தொகு] தமிழ் மொழி ஒலியன்கள்
ஒலியன் (Phoneme) என்பது தமிழில் காணப்படும் சொற்களின் பொருள்களை வேறுபடுத்தி அறிவதற்கு உரிய அடிப்படையான ஒலி அலகு..
எடுத்துக்காட்டாகத் தமிழில் காணப்படும் அடு, ஆடு, இடு, ஈடு முதலியன பொருள் கொள்ளுதலில் தம்முள் வேறுபட்டவை ஆகும்.
இவ்வேறுபாட்டை இச் சொற்களில் காணப்படும் அ(a), ஆ(a:), இ(i), ஈ(i:), ஆகிய ஒலியன்கள் காட்டுகின்றன. எனவே அ, ஆ இ, ஈ முதலியன ஆகியவை தமிழ் மொழியில் காணப்படும் தனித்தனி உயிர் ஒலியன்களாகக் கருதப்படுகின்றன.
இவ்வாறு தமிழ் மொழியில் காணப்படும் சொற்கள் அனைத்தையும் ஆ(ரா)யும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ, என்பனவும், க,ச,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,,ண்,ம்,ந்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள், ஆகியவையும் ஃ என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆய்தமும் ஆகிய 29 ஒலியன்கள் உள்ளன.
[தொகு] ஒலி வகைகள்
ஒலிகள் அவை பலுக்கப்படும் போது பயன்படும் ஒலி உறுப்புக்களின் இடத்தையும்(place) அவை பலுக்கப்படும் முறையையும்(manner) அடிப்படையாக வைத்துப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படும்.
ஒலி உறுப்புக்கள்:
1. காற்றறைகள் (air chambers) - நெஞ்சு, தொண்டை, வாய், மூக்கு - நெஞ்சிலிருந்து எழும் காற்று தொண்டை வழி சென்று வாய், மூக்கு ஆகியன வழி வெளிப்படும்போதுதான் இவ்வொலிகள் உண்டாகின்றன.
2. ஒலி எழுப்பிகள் (articulators) - பல், இதழ், நாக்கு, அண்ணம், குரல்வளை - இவற்றுள் பல், அண்ணம் ஆகியன அசையா உறுப்புக்கள்; இதழ், நாக்கு, குரல்வளை மடல்கள்(voice chords) அசையும் உறுப்புக்கள்.
3. வாய் ஒலிகளும் மூக்கு ஒலிகளும்(oral & nasal)
காற்று வாய்வழி வரும்பொழுது மூக்கறை அடைபட்டு வாய்வழி ஒலி வரும்போது உருவாகும் ஒலி அலைகள் வாய் ஒலிகள்(oral sound) - அ,இ,க்,ச்,ட் போன்றவை
வாய் அடைக்கப்பட்டு மூக்கு வழி வரும் ஒலி அலைகள் மூக்கொலிகள்(nasal) - ங்,ஞ்,ண்,ம்,ந்,ன் போன்றவை.