பல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பல் பெரும்பாலான முள்ளந்தண்டுளிகளின் தாடையில் காணப்படுகிறது. இதன் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும். சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கவும் தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன. பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இருதடவைகள் பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் ஆறு மாத வயதில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.