பேச்சு:தமிழ்நெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது pro LTTE media என சில இலங்கை ஆங்கிலசிங்கள பத்திரிக்கையில் குறிப்பதுண்டு. இதுபற்றியும் கட்டுரை இருக்கவேண்டுமென நினக்கிறேன்.--கலாநிதி 16:47, 14 அக்டோபர் 2006 (UTC)
- கலாநிதி, கருத்துக்களுக்கு நன்றி ஆயினும் நான் வேலைசெய்யும் அமைப்பின் கொள்கைப்படி இவ்வாறான கருத்துக்களை என்னால் வெளியிடமுடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்ததால் பெரும் சண்டையே பேச்சுப் பக்கத்தில் காணப்படுகின்றது. தவிர வள்ளுவர் குறிப்பிட்டபடி "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" இவ்வாறான கருத்துக்கள் விக்கிப்பீடியர்களின் கருத்துப்பிழவுகளுக்கும் வழிவகுக்கலாம். தமிழ்விக்கிபீடியாவில் பங்களிப்பவர்கள் மிகக்குறைவு அதிலும் கருத்துப்பிழவு ஏற்பட்டுவது நல்லதல்ல. வள்ளுவரும் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்றே கூறியிருக்கின்றார் எந்த ஊடகத்தையாவது நாம் முழுமையாக நம்பமுடியாது. இலங்கையில் உள்ள எந்தஒரு ஊடகமும் நானறிந்தவரையில் வியாபாரநோக்கில் இனப்பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்வதிலேயே குறியாகவுள்ளனர். சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் பாடுபடுபவர்கள் மிகக்குறைவே. --Umapathy 17:14, 14 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] Live bookmark
Live bookmark வசதி வருங்காலத்தில் அனேக தளங்களில் வரப்போவது தான். இதை ஒரு கலைக்களஞ்சியத் தகவலாக சேர்க்கத் தேவையில்லை. இது குறித்த படத்தையும் நீக்கலாம்--ரவி 10:00, 15 அக்டோபர் 2006 (UTC)
- இது எனக்குப் புதிய செய்தி.--Kanags 10:43, 15 அக்டோபர் 2006 (UTC)
-
- ரவி மற்றும் சிறீதரன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி. Live Book Mark வசதி இணையத்தில் பிரபலமாகி வருகின்றபோதிலும் பாவிக்கின்ற தளங்கள் குறிப்பாக இலங்கையில் குறைவே. காலப்போகில் பிரபலமானல் நீக்கிவிடலாம். இப்போதைக்கு விட்டுவைக்கலாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. --Umapathy 11:01, 15 அக்டோபர் 2006 (UTC)