துருவக் கரடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துருவக் கரடி (polar bear), ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் கரடி இனமாகும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் நிறையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் நிறையுடையவை. இவை வசந்த காலத்தில் கர்ப்பந் தரிக்கின்றன. இவற்றின் கர்ப்பகாலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 துருவக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுகப்பட்டுள்ளது.