தொழில்துறை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொழில்துறை (industry) என்பது, பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். தொழில்துறையில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு முதலீடு தேவைப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட துறையில், மிகவும் வெற்றிகரமான தொழிற்சாலைகள், பொதுவாகப் பெருமளவு முதலீட்டுடன் தொடங்கப்பட்டனவாகவோ அல்லது விரைவான விற்பனை மூலம் மேலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளுக்குத் தேவையான முதலீகளைப் பெறக்கூடியவகையில், ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் அறிமுகப் படுத்தியனவாகவோ இருக்கின்றன.
தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கினதும் நிலக்கரியினதும் பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுட் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாதளவு தூரத்திலிருந்த உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதுமில்லாதவாறு அளவிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறை யிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான பங்கிலும் குறைவானதாகும். ஆனால் இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.
[தொகு] மார்க்சிசமும், தொழில் துறையும்
தொழில் துறையின் மீதான கட்டுப்பாடு, மார்க்சிசக் கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும்.