பயனர் பேச்சு:தொழில்நுட்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், தொழில்நுட்பம்!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--சிவகுமார் 16:33, 20 ஜூலை 2006 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] உங்கள் ip முகவரி
உஙகள் ip முகவரி 198.62.10.100 என்றால் தெரியப்படுத்தவும். இந்த முவரியில் இருந்து செய்யப்படும் தொகுப்புகளும் நீங்கள் செய்தது தானா?--ரவி 10:10, 6 அக்டோபர் 2006 (UTC)
பயனர்களின் வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் உங்கள் மாற்றங்களைச் செய்து கொண்டிருந்ததால் உங்கள் பயனர் கணக்கையும் தொடர்புடைய ஐ.பி. முகவரியையும் ஒரு நாள் பங்களிக்கத் தடை செய்துள்ளேன். இது தவறு என நீங்கள் கருதினால், இங்கே தெரிவியுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். -- Sundar \பேச்சு 10:17, 6 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] தடை
எனது IP முவவரி தடை செய்யப்பட்டுள்ளதேன். தமிழக அரசாங்கம் தமிழை வளர்ப்பதில் அக்கரைக்காட்டாத நிலையில் தனியார் முயற்சியில் தான் கலைச்சொற்கள் வளர்ச்சிபெற வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் தனிமங்கள் பக்கத்தில் தமிழ் பெயர்கள் இடுகையிட்டு வருகிறேன். இதையும் தடுத்து நிறுத்துவது என்றால் Wikipedia விலும் ஏதோ அரசியல் திகழ்கிறது என காட்டுகிறது.
அது வரை தமிழில் தனிமங்களின் பெயர்கள்
http://geocities.com/tamildictionary
http://tamilglossary.tripod.com
http://angelfire.com/planet/tamil
ஆகிய இணையதளங்களில் தினந்தோறும் சேர்க்கப்படும். தடையின்றி வளரும் தமிழ். —The preceding unsigned comment was added by 198.62.10.100 (talk • contribs) .
- உங்கள் நோக்கத்தை ஒன்றும் நாங்கள் குறை சொல்லவில்லை. அது பாராட்டத்தக்க முயற்சி. எங்களுக்கும் தமிழ் வளர வேண்டும் என்ற நோக்கம் உண்டு. இருப்பினும் பெரிய மாற்றங்களைச் செய்யும் முன் மற்ற பங்களிப்பாளர்களின் கருத்தை அறிய வேண்டும். பல பயனர்கள் பல முறை உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்திகள் விடுத்தும் (ta:பயனர் பேச்சு:தொழில்நுட்பம், ta:பயனர் பேச்சு:198.62.10.100) நீங்கள் பதிலேதும் கூறாமல் உங்கள் மாற்றங்களைச் செய்து வந்ததே இந்த இடைக்காலத் தடைக்குக் காரணம். நீங்கள் மற்ற பயனர்களைக் கலந்து இனி பங்களிப்பீர்களென்றால் உடனடியாக உங்கள் தடையை நீக்கிவிடுகிறேன். -- Sundar \talk \contribs 10:52, 6 October 2006 (UTC)
[தொகு] தடை நீக்கம்
பயனர் செய்திகளை கவனிக்காததால் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார். தடை என்பது ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அல்ல, அவரால் ஊறு விளையும் என்ற வாய்ப்பை தவிர்க்கவே. (இது விக்கிபீடியா கொள்கையாகும்.) அதனால், இந்தப் பயனர் கணக்கின் மீதும் உடனிணைந்த ஐபி முகவரி மீதும் இருந்த தடை நீக்கப்படுகிறது. -- Sundar \பேச்சு 12:00, 6 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] நல்வரவு
தொழில்நுட்பம் நல்வரவு, தொழில்நுட்பம்.காம் நல்ல முன்மாதிரி. பின்வரும் பக்கமும் உங்கள் ஈடுபாட்டுடன் தொடர்பு கொண்டது. Wikipedia:கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு
உங்களைப்பற்றிய ஒரு இரு தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தால் ஒரு ஆரோக்கியமான சூழலை த.வி.க.க பேண பெரிதும் உதவும். நன்றி. --Natkeeran 16:25, 6 அக்டோபர் 2006 (UTC)
- தடை என்பது ஒருவர் செய்த தவறுக்கான தண்டனை அல்ல, அவரால் ஊறு விளையும் என்ற வாய்ப்பை தவிர்க்கவே. நீங்கள் விக்கிபீடியா நடைமுறைகளைப் பின்பற்றிப் பங்களிக்க வாழ்த்துக்கள். புகுபதிகை செய்து பங்களிப்பது மிகவும் வரவேற்கப்படுகிறது. நன்றி. --கோபி 16:31, 6 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] FARC
Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language
--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)