பயனர் பேச்சு:198.62.10.100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வருக விக்கிபீடியாவிற்கு! விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:
- நீங்கள் விரும்பும் பயனர் பெயரை பெறலாம்
- உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.
- உங்களுக்கென பிரத்யேக பயனர் பக்கம் கிடைக்கும்
- உங்களுக்கென பிரத்யேக பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுக்கு மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.
- நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி
- விக்கிபீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி
- கோப்புகளை பதிவேற்றும் அனுமதி
- உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி
- விக்கிபீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு
- வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
- பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்
நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.
ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.
நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:
- புதுப் பயனர் பக்கம்
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிபீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 11:16, 13 ஜூலை 2006 (UTC)
கட்டுரைத் தலைப்புகளில் ஆங்கிலம் தவிர்ப்பது விக்கிபீடியா கொள்கை. அதைப் பின்பற்றுமாறு வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கிய பேச்சுப் பக்கங்களில் சில கருத்துக்களை இட்டுள்ளேன். அவற்றையும் கவனிக்கவும். நன்றி--ரவி 19:09, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
கட்டுரைத் தலைப்புக்களில் ஆங்கிலச் சொற்கள், எழுத்துக்களை தவிர்க்குமாறு இன்னும் ஒரு முறை உங்களை கேட்டுக்ககொள்கிறேன். நன்றி--ரவி 14:14, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
நீங்கள் ஒரு பயனர் கணக்கை உருவாக்குவது நல்லது. மேலும் இனியாவது தலைப்பில் ஆங்கிலத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் உருவாக்கும் பக்கங்களை நகர்த்தும் சிரமத்தைக் கொடுத்து வருகிறீர்கள். இது ஒரு விசமச் செயலாகப் படுகிறது. ஏனெனில் பயனர்களின் நேரத்தை நீங்கள் வீணடிக்கிறீர்கள். --கோபி 15:38, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] போக்குவரத்து பேச்சு
போக்குவரத்து பேச்சுப் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகள் நன்று. ஒரு சிறிய விடயம் நீங்கள் புது கலைச் சொற்களை பரிந்துரக்கும் போது ஏனயவர்களின் பரிந்துரைகளை நிக்காதிகள். அப்படி நிக்குவதாயின் உங்கள் கருத்தை பேச்சுப் பக்கத்தில் இட்டு பின்னர் யாரும் முரன்படாவிட்டால் திருத்தலாம். மேலும் அப்பக்கத்தில் உள்ள பெரும்பாலன செற்களைC.R.Selvakumarதான் ஆக்கியிருந்தார். அவரிடமும் கலந்துரையாடுவது நல்லது. மேலும் பிழை என நீங்கள் கருதினாலும் அதை நீக்காமல் <del></del> அடையாளம் மூலம் வெட்டிக் காட்டுங்கள்--டெரன்ஸ் 04:50, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] துடிப்பண்டம்
துடிப்பண்டம் குறித்த கட்டுரையை துவக்கியதற்கு நன்றி. ஆங்கில விக்கபீடியா கட்டுரையை மொழிபெயர்க்க விரும்பினால், ஆங்கில உரையை பேச்சுப் பக்கத்தில் ஒட்டி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழாக்கி கட்டுரைப் பக்கத்தில் சேர்க்கலாம். முழு ஆங்கில உரையையும் கட்டுரைப்பக்கத்தில் இட வேண்டாம். நன்றி--ரவி 14:43, 6 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] பார்க்க
தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் கட்டுரையையும் அதன் பேச்சுப் பக்கத்தையும் பார்க்கவும். உங்கள் பங்களிப்புகளை அங்கு செய்யலாம். ஒரு வரிக்ககட்டுரைகளை தொடங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்--ரவி 20:52, 8 செப்டெம்பர் 2006 (UTC)
- தயவுசெய்து தனிமங்களுக்குப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத தமிழ்ப் பெயர்களில் கட்டுரைகளை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கட்டுரைகளை உருவாக்கிய பின்னர் பொருத்தமான நகர்த்தல் பதிகை மற்றும் மாற்றங்கள் செய்வதில் பயனர்களின் நேரம் சுரண்டப்படுகிறது. இது உங்களுக்கு விடுக்கப்படும் இரண்டாவது வேண்டுகோளாகும். இவ்வாறே தொடர்ந்து உருவாக்கி வருவீர்களானால் உங்களரு ஐ. பி. ஐ தடுக்கப் பரிந்துரைக்கப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன். நன்றி. --கோபி 15:42, 27 செப்டெம்பர் 2006 (UTC)
பேச்சு:தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் உள்ள அனைத்து உரையாடல்களுக்கும் உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறோம். உங்கள் கருத்தை பதியாமல் நீங்கள் தொடர்ந்து கட்டுரைப்பங்களிப்புகள் செய்தால், நீங்கள் விரும்பிய வண்ணம் உங்கள் கட்டுரைகள் தொகுக்கப்படும் என எதிர்ப்பார்க்க வேண்டாம். நன்றி--ரவி 18:26, 27 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] பட்டியல் உருவாக்கக் கோரிக்கை
அணுவெண், ஆங்கிலப் பெயர், குறியீடு, தமிழ்ப் பெயர், தமிழ்ப் பெயர்க் காரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு அட்டவணையை தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள் கட்டுரையில் உருவாக்க உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். இதன் மூலம் உங்களது உழைப்பும் ஏனையோரது உழைப்பும் பயனுள்ள வகையில் பயன்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:23, 27 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] உங்கள் IP முகவரியை ஏன் தடை செய்யக்கூடாது?
சில நாட்களுக்கு முன்னரும் அண்மையிலும் சில விளக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்த்து உங்கள் பேச்சுப் பக்கத்திலும் குறித்த கட்டுரைப் பக்கங்களிலும் தகவல் இட்டோம். அதற்குப் பிறகு நீங்கள் தளத்துக்கு வந்தும் அவற்றுக்கான விளக்கங்களை தராமல் தொடர்ந்து உங்கள் பாணியில் பங்களிப்பது வருத்தமளிக்கிறது. ஆப்பிளை ஆப்பழம் என்று எந்த விளக்கமும் மறுமொழியும் தராமலே திரும்பத் திரும்ப மாற்றுகிறீர்கள். நீங்கள் இட்ட பெயர் சரியா தவறா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனார், உங்கள் கருத்தை பேச்சுப்பபக்கத்தில் தெரிவிப்பது விக்கி நற்பழக்கவழக்கமாகும்.
அடையாளம் காட்டாத பயனர்களின் பங்களிப்பையும் வரவேற்கும் விக்கிபீடியாவின் திறந்த கொள்கையை எந்த விதத்திலும் உற்சாகப்படுத்தவதாக இல்லை, உங்கள் நடவடிக்கை. அரசியல் காரணங்களுக்காக அடையாளம் காட்டாமல் பங்களிக்கவும், புனைப்பயனர் பெயருக்கு கூட பங்களிப்பு பெருமை இல்லாமல் தன்னலமில்லாமல் முகமற்று பங்களிப்பு செய்ய விரும்புபவர்களுக்காகவும் தான் இந்த வசதி இருக்கிறது. நீங்கள் அடையாளம் காட்டாமல் பங்களித்தாலும், பிற பயனர்களின் நியாயமான கேள்விகளுக்கு மரியாதை நிமித்தமாகவாவது பதிலளிப்பது உங்கள் கடமை. பொறுப்பற்று எந்த வித மறுமொழியும் அளிக்காமல் ஒளிந்து இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல இந்த வசதி என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இப்படி செயல்படுவதால், உங்கள் பங்களிப்புகள் நீங்கள் விரும்பிய வண்ணம் தொக்குக்கப்படாமல் போவது உங்களுக்கு நட்டம். உங்களுக்கு கருத்து சொல்லியே மாய்வதால் பிற பயனர்களின் நேரம் நட்டம். உங்கள் பக்கங்களை நகர்த்தி நிர்வகித்துக் கொண்டிருப்பதால் பிற நிர்வாகிகளுக்கு நேரம் நட்டம். நீங்கள் செய்யும் பங்களிப்புகள் பயனுள்ளவையாக இருந்ததால் தான் இத்தனை காலம், உங்களை கனிவுடன் அணுகி வந்திருக்கிறோம். இனியும், நீங்கள் உங்கள் பாணியில் தொடர்ந்தால், உங்கள் IP முகவரியை தடுப்பது தவிர வேறு வழியில்லை. அப்படித் தடுப்பதால், நீங்கள் வருங்காலத்தில் செய்யக்கூடிய பயனுள்ள பங்களிப்புகளும் விக்கிபீடியாவுக்கு கிடைக்காமல் போகும் என்பதால் எங்களுக்கும் நட்டம் தான். உங்களுக்கு பேச்சுப் பக்கத் தகவல்களை கவனிக்க வேண்டும் என்பதே தெரியாமல் இத்தனை நாள் இருக்கிறீர்கள் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.
இதன் காரணங்களால், இதை கடைசி நினைவுறுத்தலாக கொண்டு விக்கி பங்களிப்பு நடைமுறைகளுக்கு நடக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தெரியாவிட்டால், என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் IP முகவரி தற்காலிகமாகவோ நிலையாகவோ தடை செய்யப்படும். அந்த முகவரியில் இருந்து பிற பயனர் கணக்குகள் உருவாக்கவதும் தடை செய்யப்படும். நன்றி.--ரவி 21:22, 29 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] நான்காவதும் கடைசியுமான வேண்டுகோள்
அன்பரே, பேச்சுக்களுக்கு எப்பதிலும் அளிக்காமல், வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாமல் நீங்கள் மாற்றங்களைச் செய்து வருகிறீர்கள். இது உங்களுக்கான கடைசிச் சந்தர்ப்பம். இனி நீங்கள் தொடர்ந்தால் உங்கள் ஐபி நிரந்தரமாக தடுக்கப்படும் என்பதைத் தாழ்மையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. --கோபி 15:36, 5 அக்டோபர் 2006 (UTC)
தொழில்நுட்பம் என்ற பெயரில் தொகுப்புகளை செய்வதும் நீங்கள் தானா எனத் தெரியப்படுத்தவும்--ரவி 10:08, 6 அக்டோபர் 2006 (UTC)
[தொகு] தடை
எனது IP முவவரி தடை செய்யப்பட்டுள்ளதேன். தமிழக அரசாங்கம் தமிழை வளர்ப்பதில் அக்கரைக்காட்டாத நிலையில் தனியார் முயற்சியில் தான் கலைச்சொற்கள் வளர்ச்சிபெற வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் தனிமங்கள் பக்கத்தில் தமிழ் பெயர்கள் இடுகையிட்டு வருகிறேன். இதையும் தடுத்து நிறுத்துவது என்றால் Wikipedia விலும் ஏதோ அரசியல் திகழ்கிறது என காட்டுகிறது.
அது வரை தமிழில் தனிமங்களின் பெயர்கள்
http://geocities.com/tamildictionary
http://tamilglossary.tripod.com
http://angelfire.com/planet/tamil
ஆகிய இணையதளங்களில் தினந்தோறும் சேர்க்கப்படும். தடையின்றி வளரும் தமிழ். —The preceding unsigned comment was added by 198.62.10.100 (talk • contribs) .
- உங்கள் நோக்கத்தை ஒன்றும் நாங்கள் குறை சொல்லவில்லை. அது பாராட்டத்தக்க முயற்சி. எங்களுக்கும் தமிழ் வளர வேண்டும் என்ற நோக்கம் உண்டு. இருப்பினும் பெரிய மாற்றங்களைச் செய்யும் முன் மற்ற பங்களிப்பாளர்களின் கருத்தை அறிய வேண்டும். பல பயனர்கள் பல முறை உங்கள் பேச்சுப் பக்கத்தில் செய்திகள் விடுத்தும் (ta:பயனர் பேச்சு:தொழில்நுட்பம், ta:பயனர் பேச்சு:198.62.10.100) நீங்கள் பதிலேதும் கூறாமல் உங்கள் மாற்றங்களைச் செய்து வந்ததே இந்த இடைக்காலத் தடைக்குக் காரணம். நீங்கள் மற்ற பயனர்களைக் கலந்து இனி பங்களிப்பீர்களென்றால் உடனடியாக உங்கள் தடையை நீக்கிவிடுகிறேன். -- Sundar \talk \contribs 10:52, 6 October 2006 (UTC)
சுந்தர் மற்றும் இன்ன பிற விக்கிபீடியா நிர்வாகிகளுக்கு, இவர் செய்வது சரியாக இருக்கலாம், தவறாக இருக்கலாம். அதுவல்ல கேள்வி. ஆனால், தான் செய்வதை பிறரிடம் விவாதிக்கக்கூட தயாராக இல்லாத இவரால் தமிழ் விக்கிபீடியாவுக்கு நீண்ட கால நோக்கில் எழும் ப யன் கேள்விக்குறியது. தடை செய்த பிறகே விளக்கத்தை தர முன்வந்திருக்கும் இவருக்கு, வேலை மெனக்கெட்டு வேண்டுகோள் இட்டவர்கள் எல்லாம் வேலை அற்றவர்களா? விக்கிபீடியாவின் செயல்பாடுகளை இவரால் விளங்கிக்கொண்டு திறம்பட பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இவருடைய பங்களிப்புகளை விக்கியாக்கம் செய்து பிற பயனர்களின் நேரமும் பொறுமையும் தான் வீண். இவரது கணக்கு மற்றும் முகவரியை நிலையாக முடக்கக் கோருகிறேன்--ரவி 11:57, 6 அக்டோபர் 2006 (UTC)
- ரவி, உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், இப்பயனர்
மின்னஞ்சல்ஆங்கில விக்கி பேச்சுப் பக்கம் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு மற்றவர் செய்திகளைத் தான் கவனிக்கவில்லை என்று தெரிவித்தார். அதன் பேரில் தடையை நீக்கி உள்ளேன். இவர் இனி மற்றவர்களைக் கலந்துபேசி தொகுப்புக்களை மேற்கொள்வார் என நம்புவோம். சற்று காரமான உங்கள் கருத்தை அதுவரை விலக்கி வைக்கலாமே. :) -- Sundar \பேச்சு 12:03, 6 அக்டோபர் 2006 (UTC)
தடை செய்த பின் ஆங்கில விக்கியிலுள்ள சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் பதில் அளிப்பவர் கடந்த இரண்டு காலமாக இங்கு தினந்தோறும் வந்து போகும் தளத்தில் அவருடையபேச்சுப் பக்கத்தை ஏன் கவனிக்கவில்லை என்று புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு நிர்வாகியின் நோக்கில் இருந்து அவருடையபேச்சுப் பக்கத்தில் இடப்பட்டுள்ள விரிவான வேண்டுகோள்கள், எச்சரிக்கைகளை படித்துப் பார்த்தால் அவரை தடை செய்யும் முடிவுக்கு நாம் வந்ததில் தப்பே இல்லை என்று அவரே ஒத்துக்கொள்வார். இதில் அரசியல் எல்லாம் இல்லை. தமிழ் விக்கிபீடியாவை விட அரசியலற்ற, நற்றமிழை வளர்க்கும் வேறு தளத்தை நான் இதுவரை அறிந்திலேன். உங்களுக்கு விக்கிபீடியாவை, அதன் செயல்பாடுகளை புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தால் தயவு செய்தோ எனக்கோ சுந்தருக்கோ மடல் அனுப்புங்கள். உங்கள் தொலைபேசி எண்ணை தந்தாலும் நானே அழைத்துப் பேசுகிறேன். நன்னோக்கம் உடைய எவரையும் விக்கிபீடியாவுடன் இணைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நன்றி--ரவி 12:22, 6 அக்டோபர் 2006 (UTC)
இது இன்னும் கணக்கொன்று ஏற்படுத்தாத அல்லது வழமையாக பயனர் கணக்கை பயன்படுத்தாத பயனர்களுக்குரிய கலந்துரையாடல் பக்கமாகும். அதனால் நாங்கள் இவரை அடையாளம் காண்பதற்கு எண் சார்ந்த ஐ.பி முகவரியை (IP address) உபயோகிக்கிறோம். இவ்வாறான ஐ.பி முகவரிகள் பல பயனர்களினால் பகிர்ந்துகொள்ளப்படலாம். நீங்கள் ஒரு முகவரியற்ற பயனராயிருந்து, தொடர்பற்ற கருத்துக்கள் உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாக நீங்கள் உணர்ந்தால், முகவரியற்ற ஏனைய பயனர்களுடனான குழப்பங்களை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு, தயவுசெய்து கணக்கொன்றை ஏற்படுத்துங்கள் அல்லது புகுபதிகை செய்யுங்கள்.