தோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தோடு (earring) காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. ஆண்கள் அணியும் தோடு கடுக்கன் எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், பிளாத்திக்கு, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட்ட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில் பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது.