நீராவிப் பொறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீராவிப் பொறியானது நீராவியில் உள்ள வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியாகும். நீராவி கப்பல், புகை வண்டி போன்றவற்றில் இவை பயன்படுத்தப் படுகின்றன. இயந்திரப் புரட்சி ஏற்பட இப்பொறியே காரணமாய் இருந்தது. மின்னாற்றல் உற்பத்தி செய்ய நீராவி டர்பைன்களிலும் இவை பயன்படுகின்றன.