கப்பல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கப்பல், ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்க கூடும். மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது. உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு, பாய்மரங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன.
[தொகு] படகுகளும், கப்பல்களும்
- கொள்கலக் கப்பல் (Container ship)
- விமானம் தாங்கிக் கப்பல்
- தட்டையடிப் படகு (Barge)
- தலைமைக் கப்பல் (Capital ship)
- சரக்குக் கப்பல் (Cargo ship)
- கட்டுமரம்
- பாரந்தூக்கிக் கப்பல் (Crane ship)
- பயணிகள் கப்பல் (Cruise ship)