நெல்லை க. பேரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெல்லை க. பேரன் (கந்தசாமி பேரம்பலம், டிசம்பர் 18, 1946 - ஜூலை 15, 1991) இளம் வயதில் மரணமடைந்த ஈழத்து எழுத்தாளர். யாழ்ப்பாணம் நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேரன் பத்திரிகை நிருபராக எழுத்துப் பணியை ஆரம்பித்து ஆக்க இலக்கியகாரனாக பரிமளித்தவர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.
இவரது சிறுகதைகள் ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் மற்றும் சத்தியங்கள் ஆகியன தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. விமானங்கள் மீண்டும் வரும் என்ற குறுநாவலொன்றும் வெளிவந்துள்ளது. இவர் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஜூலை 15, 1991 இல் குடும்பத்தோடு பலியானார்.
[தொகு] இவரது நூற்கள்
- ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள்