பதேர் பாஞ்சாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பதேர் பாஞ்சாலி | |
இயக்குனர் | சத்யஜித் ராய் |
---|---|
தயாரிப்பாளர் | மேற்கு வங்காளம் அரசு |
கதை | சத்யஜித் ராய், நாவலின் தழுவல்விபுதிபூஷன் பந்தியோபதெயே |
நடிப்பு | கனு பானர்ஜீ, கருனா பானர்ஜீ, சுபிர் பானர்ஜீ, உமா தாஸ்குப்தா, சன்னிபாலா தேவி, ரேபா தேவி |
வெளியீடு | 1955 |
கால நீளம் | 122 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
பிந்தையது | அபராஜிதோ |
IMDb profile |
பதேர் பாஞ்சாலி 1955ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கனு பானெர்ஜீ,கருனா பானர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறுமி ஒருத்தி பழங்களைத் திருடுவதைப் பார்த்த அப்பழமரவீட்டிற்குச் சொந்தக்கார அம்மா அவளைத் திட்டுகின்றார்.இதனைச் சற்றும் கவனிக்காது அச்சிறுமியும் அப்பழங்களைக் கொண்டு சென்று காட்டிற்கு நடிவிலே அமைந்துள்ள தனது வீட்டில் உள்ள வயதுபோன பாட்டிக்குக் கொடுக்கின்றார்.அப்பாட்டியும் அச்சிறுமிக்குத் தான் சமைக்கும் உணவுகளினை கொடுக்கும்.சில சமயங்களில் பாட்டுகள் பாடி அச்சிறுமியை மகிழ்விக்கும்.பிராமணரான அச்சிறுமியின் தந்தையும் கதைகள் எழுதுபவராவார்.தான் எழுதும் கதைகளினை நம்பி குடும்ப வாழ்க்கையினை சமாளிப்பவராகவும் விளங்குகின்றார்.அச்சமயம் அவர் மனைவியும் இரண்டாம் குழந்தையாக அப்புவைப் பெற்றெடுக்கின்றார்.அப்புவும் வளர்கின்றான்.சகோதரியினால் உணவுகளை அன்பாக ஊட்டப்பெற்றுப் பின்னர் தாயின் அரவணைப்பில் வாழும் அப்பு சகோதரியுடன் வீட்டிற்கு வெளியில் செல்லவும் ஆசை கொள்கின்றான்.இருவரும் வீட்டிற்கு வெளியில் அமைந்திருக்கும் புகையிரதப் பாதை வழியே ஓடுகின்றனர் அச்சமயம் அங்கு பலத்த மழையும் கொட்டுகின்றது.மழைச் சாரலில் பலமாக நனைந்து கொண்ட அப்புவின் சகோதரி வீட்டிற்குச் சென்ற பின்னர் கடும் நோயால் வாட்டப்படுகின்றாள்.அச்சமயம் வெளியூர் சென்றிருந்த அவள் தந்தையும் திரும்பி வருகையில் மகள் இறந்துவிட்டாள் என்பதனைத் தனது மனைவி கூறக்கேட்டு ஓவெனக் கதறி அழுகின்றார்.பெருமழையினால் இடிந்து விழும் நிலையிலிருந்த அவர்களின் மண்வீட்டைப் பார்த்து பயந்து போய் அக்குடும்பம் வேறூரை நோக்கி மாட்டுவண்டியில் புறப்படுகின்றது.