பல்லவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பல்லவர்கள் தமிழ் நாட்டில் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 400 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய தோற்றம் பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களே என ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றிப் பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழியின் அடிப்படையில், பல்லவர் காலத்தை மூன்று பிரிவாகச் சில ஆய்வாளர் இனங்கண்டுள்ளனர்.
- 1. முற்காலப் பல்லவர் காலம்
- 2. இடைக்காலப் பல்லவர் காலம்
- 3. பிற்காலப் பல்லவர் காலம்
பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. முதலாம் மகேந்திரவர்ம பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்ம பல்லவன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
பொருளடக்கம் |
[தொகு] அறியப்பட்ட சில பல்லவ அரசர்கள்
[தொகு] முற்காலம்
- சிவக்கந்தவர்மன்
[தொகு] இடைக்காலம்
- குமாரவிஷ்ணு
- கந்தவர்மன்
- வீரவர்மன்
- கந்தவர்மன்-II
- சிம்மவர்மன்
- சிம்மவிஷ்ணு
- மகேந்திரவர்மன்
- நரசிம்மன்-I
- மகேந்திரன்-II
- பரமேஸ்வரவர்மன்-I
- நரசிம்மன்-II
[தொகு] பிற்காலம்
- நந்திவர்மன்-II
- தண்டிவர்மன்
- நந்திவர்மன்-III
- நிருபத்துங்கன்
- அபராஜிதன்